கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட கூகுள் CEO சுந்தர் பிச்சை, சமூகவலைதளங்களில் கிரிக்கெட் தொடர்பான கருத்துகளை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், ஒரு கிரிக்கெட் அணியில் முதலீடு செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா, அடோப் CEO சாந்தனு நாராயண் உள்ளிட்ட தொழிலதிபர்கள் அமெரிக்கா நடத்தும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் (MLC) முதலீடு செய்துள்ளனர்.அதேபோல், சுந்தர் பிச்சை "தி ஹண்ட்ரட்" கிரிக்கெட் தொடரில் முதலீடு செய்ய உள்ளார்.
2021 முதல் நடைபெறும் "தி ஹண்ட்ரட்" கிரிக்கெட் தொடர், IPL போல் பிரபல நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 8 அணிகளுடன் நடத்தப்படுகிறது. லண்டன் ஸ்பிரிட் அல்லது ஓவல் இன்விசிபிள்ஸ் அணிகளில் ஒன்றில் சுந்தர் பிச்சை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் சுந்தர் பிச்சையுடன் பல தொழில்நுட்ப CEO-க்கள் உள்ளனர். "தி ஹண்ட்ரட்" ஏலத்தில் இந்த கூட்டமைப்பு ரூ.837 கோடி (97 மில்லியன் டாலர்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.