• India
```

அன்னாசி பழத்தை...வெட்டி விற்றால் இவ்வளவு இலாபமா...எப்படி சாத்தியம்...?

Pineapple Stall Ideas Tamil

By Ramesh

Published on:  2024-12-18 20:35:44  |    742

Pineapple Stall Ideas Tamil - அன்னாசி பழத்தை வெட்டி விற்று அதன் மூலம் எவ்வாறு நல்ல வருமானம் பார்க்க முடியும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pineapple Stall Ideas Tamil - பொதுவாக இந்தியா அன்னாசி உற்பத்தியில் உலகளாவிய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, வருடத்திற்கு கிட்டதட்ட 1.4 மில்லியன் டன் அன்னாசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன, இந்தோனேசியா, காஸ்டோ ரிகா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள், வருடத்திற்கு 3 மில்லியன் டன் அன்னாசிகள் உற்பத்தி செய்து, உலகளாவிய அளவில் முன்னிலை வகிக்கின்றன.

பொதுவாக அன்னாசி என்பது நல்ல நீர்ச்சத்து மிக்கது, செரிமானத்திற்கு உகந்தது, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை பெருக்க வல்லது, புற்று நோயாளிகள் அன்னாசியை எடுத்துக் கொள்ள மருத்துவரே வலியுருத்துவார்கள், அந்த வகையில் அன்னாசியை மொத்த விலைக்கு வாங்கி அதை வெட்டி விற்பதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க முடியும்.



பொதுவாக அன்னாசி என்பது மொத்த விலையில் கிலோ 30 முதல் 50 வரை விற்கப்படுகிறது, பொதுவாக நாம் வாங்கும் வாழைப்பழத்தை விட மிக கம்மியான விலை தான், ஆனால் வாழைப்பழத்தை விட அதிக சத்து மிக்கது, ஒரு பழத்தின் விலை என்பது 50 ரூபாய் எனவே வைத்துக் கொள்வோம், ஒரு பழத்தில் 20 - 25 நீள் வெட்டுகள் விழும், 3 வெட்டுகள் மிளகாய் பொடி தூவி விற்கும் போது 15 முதல் 20 ரூபாய் வரை விற்கலாம்.

சாலையோரத்தில் கார்கள், பைக்குகள் அதிகமாக செல்லும் பாதையில் ஒரு டேபிளில் உட்கார்ந்து கொண்டு தினசரி 6 முதல் 8 அன்னாசிகளை இவ்வாறாக வெட்டி விற்றால் கூட, ரூ 800 முதல் 1000 வரை வருமானம் பார்க்க முடியும், சராசரியாக மாதம் 25000 முதல் 30,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி விட முடியும், நல்ல நெடுஞ்சாலைகளில் மக்கள் காரையோ பைக்கையோ நிறுத்தும் இடத்தில் கடை அமைப்பு இருக்க வேண்டும்.

" சிறிய முதலீடுகளில் நல்ல வருமானம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள், சாலையோரங்களில் ஒரு சின்ன அன்னாசி ஸ்டால் போட்டால் போதும் "