• India
```

தேங்காய் போளி...மாதம் ரூ 15000 முதல் 20000 வரை...வருமானம் தரும் சிறிய குடிசைத் தொழில்...!

Thengai Poli Business Plan

By Ramesh

Published on:  2024-12-16 16:35:12  |    2530

Thengai Poli Business Plan - நல்ல இலாபம் தரும் வகையில் தேங்காய் போளி குடிசைத் தொழில் துவங்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Thengai Poli Business Plan - தென் தமிழகத்தின் சிறந்த தின்பண்டமாக அறியப்படுகிறது தேங்காய் போளி, பொதுவாக போளிகள் பெரும்பாலும் மைதாவில் செய்யப்படுகின்றன, கோதுமையில் செய்தால் கொஞ்சம் ஹெல்த்தில் கன்சர்ன் செய்தது போல இருக்கும், கோதுமை, வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், ஏலம் உள்ளிட்டவைகள் ஒரு கலவையாக மேற்கொள்ளப்பட்டு தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் போளி ரெடி ஆகிவிடும்.

பெரிதாக இத்தொழிலில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் கடை இருப்பின் கடையில் வைத்து கூட போளி சுடலாம், இல்லை முதலீடு அவ்வளவு மேற்கொள்ள முடியாது என்றால் வீட்டில் இருந்தே கூட செய்யலாம், தொழில் செய்ய நினைக்கும் மகளிருக்கும் போளி செய்து சந்தைப்படுத்துவது என்பது ஒரு சிறந்த எளிய தொழிலாக இருக்கும்.



பொதுவாக போளி செய்வதற்கான செய்முறை என்பது மிக மிக எளிது, அதை வீட்டில் இருந்தே கூட விற்க முடியும், பேக்கரிகள், டீ கடைகளுக்கு சென்று கூட போடலாம், பொதுவாக ஒரு போளியின் விலை சந்தைகளில் தற்போது 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது,  வீட்டில் வைத்து நீங்கள் விற்கும் போது ஒரு போளி ரூ 20 எனவே விற்கலாம். கடைகளுக்கு ரூ 2 முதல் 4 வரை குறைத்து விற்கலாம்.

ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 100 போளிகள் சந்தைப்படுத்தினால் கூட தினசரி ரூ 1500 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், அதில் இலாபம் என்று பார்க்கும் போது ரூ 500 முதல் 700 வரை இருக்கலாம், மாதத்திற்கு இலாபம் மட்டும் என்று பார்க்கும் போது ரூ 15,000 முதல் 20,000 வரை கையில் நிற்கும், ரொம்ப பெரிய அளவில் செய்யும் போது இன்னும் அதிகமாக இலாபம் பார்க்கலாம்.