• India
```

சாலை வகை மீன்கள் விற்பனையில் இவ்வளவு இலாபமா?

Fish Business Ideas in Tamil | Selling Fish Business

By Dharani S

Published on:  2024-09-28 12:15:43  |    302

Fish Business Ideas in Tamil -சாலை வகை மீன்கள் விற்பதின் மூலம் அதீத இலாபம் பார்க்க முடியும் என மீன் விற்பனையாளர்கள் கூறி வருகின்றனர், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக சாலை வகை மீன்கள் விலையும் குறைவாக இருக்கும், அதே சமயத்தில் அதில் இருக்கும் சத்துக்களும் மிகுதியாக இருக்கும், ஒரு 15 ரூபாய்க்கு வாங்கினாலே பெரும்பாலானோரின் வீட்டில் மூன்று வேளைக்கான சாப்பாடு அதை வைத்து ஓடி விடும். சரி அதை வைத்து எப்படி தொழில் செய்யலாம் என்று கேட்டால், முதலி மீனை கொள் முதல் செய்வதர்கு நேரடியாக மீன் பிடி துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும், பொதுவாக சாலை மீன்கள் மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரம் துண்டுகளாக விற்பனை செய்வார்கள். அன்றைய மார்க்கெட்டை பொறுத்து ஆயிரம் சாலை மீன்கள் ரூபாய் 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படும்.



நமக்கு ஒரு மீன் எவ்வளவு அசல் ஆகிறது என்றால் 30 பைசா தான், சந்தைகளில் பொதுவாக 3 அல்லது 4 சாலை மீன்கள் ரூபாய் 10-க்கு விற்கப்படும்.

பத்து ரூபாய்க்கு நான்கு சாலை மீன்கள் என்று வைத்தால் கூட, ஆயிரம் சாலை மீன்களை விற்றால், ரூபாய் 2,500 ஒரு நாளில் மட்டும் சம்பாதிக்க முடியும், அதில் இலாபம் மட்டும் தனியாக 2,100 ரூபாய் கையில் நிற்கும், காலை 6 மணிக்கு மீன் சந்தைக்கு சென்றால் 12 மணிக்குள் அத்துனை மீன்களையும் விற்று வீட்டுக்கு வந்து விடலாம். அப்படியே மீன் மிஞ்சினால் கூட, உப்புகண்டம் போட்டு, நன்கு காய வைத்து கருவாடாக மாற்றி விடலாம். மீனை விட கருவாட்டிற்கு சந்தைகளில் மவுசு அதிகம்.

தற்போதெல்லாம் சாயங்காலமும் மீன் விற்கப்படுகிறது, அடுத்த நாள் சமையலுக்கு காலை வந்து மீன் வாங்க முடியாதவர்கள், சாயங்காலமும் வந்து வாங்கி செல்கிறார்கள், மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் சாயங்காலம் மீன் கடை போட்டால், சாயங்காலமும் கொஞ்சம் விற்பனைகளை அள்ளலாம், இலாபத்தில் கொஞ்சம் அதிகம் பார்க்க முடியும், பொதுவாக மீனை தொழிலாக எடுத்துக் கொண்டவர்கள் மூழ்கியதே இல்லை, என்ன அதிகாலை ஒரு மணிக்கே துறைமுகத்திற்கு மீன் எடுக்க செல்ல வேண்டும், இரவு நேரம் தூக்கம் குறையும், கொஞ்சம் உழைப்பும் அதிகம், அதே சமயத்தில் இலாபமும் அதிகம்