• India
```

ஆயுர்வேத செடி வளர்ப்பு...உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு...மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம்...!

Medicinal Plant Business Ideas

By Ramesh

Published on:  2024-12-13 15:19:49  |    1554

Medicinal Plant Business Ideas - என்ன தான் அல்லோபதி உலகெங்கும் ஆட்கொண்டாலும் இன்னமும் ஆயுர்வேதத்திற்கான தேவை மக்களிடம் இருக்க தான் செய்கிறது, அல்லோபதி நோயின் வீரியத்தை குறைக்கிறது, ஆயுர்வேதம் நோயே இல்லாமல், நோயே வராமல் தடுக்கிறது என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது, அல்லோபதியால் பல பக்க விளைவுகள் இருப்பதால் மக்கள் மறுபடியும் ஆயுர்வேதம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

ஒரு இருமல், சளிக்கு என்று அல்லோபதியில் 3 முதல் 4 மாத்திரை எடுக்க வேண்டி இருக்கும், ஆனால் ஆயுர்வேதத்தில் ஒரு தூதுவளை உருண்டை போதும், ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் அல்லோபதி போல எந்த பக்க விளைவுகளையும் அது கொடுப்பதில்லை, உடனடி பயன் இல்லை என்றாலும் நோயுக்கான தீர்வு கிடைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



ஆனால் தற்போதெல்லாம் நகரமயமாக்கல் என்னும் சூழலால் ஆயுர்வேத செடிகள் எல்லாம் அழிந்து போகின்றன, கிராமங்களில் மட்டுமே கொஞ்சம் மிச்சம் இருக்கிறது, அந்த வகையில் துளசி, தூதுவளை, ஆமணக்கு, கண்டங்கத்திரி, சுத்தி செடி, சாரணம், அருகம்புல், வெற்றிலை, தும்பை, ஆவாரம், கற்றாழை, கீழா நெல்லி, வேப்பில்லை உள்ளிட்ட ஆயுர்வேத செடிகளை மக்கள் தற்போது தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த செடிகளை எல்லாம் தேடி எடுத்து உங்கள் தோட்டங்களில் பயிரிடுவதன் மூலம், மக்கள் தேடி வந்து கன்றுகளை வாங்கி செல்வார்கள், காய்ந்த செடி இலைகளை அரைத்து பொடியாகவும் விற்கலாம், பொதுவாக ஒரு ஆயுர்வேத செடி ஆனது 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது, ஆயுர்வேத பொடிகள் 50 கிராம் 50 ரூபாய் என விற்கப்படுகிறது.

" செடிகள் மற்றும் அதன் பயன்கள் என ஒரு போர்டு மட்டும் ரெடி செய்து தோட்டத்தின் முன்பு வைக்கும் பட்சத்தில் மக்கள் ஆயுர்வேத செடிகளை தேடி வந்து வாங்கி செல்வர், செடிகளும் மட்டும் தண்ணீர் மட்டும் தெளித்துக் கொண்டு உட்காந்த இடத்திலேயே மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம் "