Rice Shop Business Ideas Tamil - அரிசி என்பது மக்களின் தினசரி பயன்பாடு, அந்த வகையில் நல்ல இலாபம் தரும் வகையில் ஒரு அரிசி கடை வைப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Rice Shop Business Ideas Tamil - அரிசி கடை முதலீடு என்ன, கொள்முதல் எப்படி செய்யமுடியும், இலாபம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
சரி அரிசி கடை எப்படி வைப்பது, முதலீடு என்ன?
நல்ல மக்கள் சூழும் ஒரு இடத்தில் நன்கு பார்வையாக விசாலமான கடை ஒன்றை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும், அரிசிகளின் டீலர்கள் எண்களை இந்தியாமார்ட் உள்ளிட்ட தளங்களில் தட்டி நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அப்படி இல்லை எனில் வாரம் ஒரு முறை ஏரியா கடைகளுக்கு டீலர்கள் டெலிவரிக்கு வருவார்கள், அப்போது அவர்களிடம் கடை வைப்பதாக கூறி விலைகளையும் பேசி ஆர்டர்களையும் அப்போதே கொடுத்திடலாம்,
கடைக்கான லைசென்ஸ், உணவு பாதுகாப்புதுறை ஆவணங்களை கடை திறப்பதற்கு முன்னதாக பதிவு செய்து கொள்வது அவசியம், பொன்னி, நெய் கிச்சடி, இட்லி அரிசி, சம்பா, பச்சரிசி, பாசுமதி, சீரக சம்பா இவைகள் தான் அதிகமாக ஓடக்கூடிய ரகங்கள், இவைகளை அதிகமாக கொள்முதல் செய்து விட்டு மீதி ரகங்களை கொஞ்சம் கொஞ்சம் வாங்கி கொள்ளலாம்.அரிசி கடைய பொறுத்தவரை குறைந்த பட்சம் ஒரு 5 இலட்சம் கையில் இருக்க வேண்டும், இருந்தால் கடை சரக்கோடு தயாராகி விடும்.
லோக்கலாக இருக்கும் மில்களிலும் கொஞ்சம் அரிசிகளை கொள்முதல் செய்து வைத்துக் கொள்வது நல்லது, ஒரு சிலர் குறைந்த ரக அரிசிகளை தேடி அலைவார்கள், அவர்களுக்கும் நியாயமான விலையில் கொடுத்திட லோக்கல் மில்களில் இருக்கும் அரசி ரகங்களில், கொஞ்சம் நல்ல ரகங்களை பார்த்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், பிராண்டடு அரிசிகளை விட லோக்கல் மில்களில் வாங்கும் அரிசிகள் நல்ல இலாபத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
இலாபத்தை பொறுத்த வரை சில்லறையாக விற்றால் ஒரு மூடைக்கு 250 முதல் 350 ரூபாய் வரை இருக்கும், மொத்தமாக விற்கும் போது 200 ரூபாய் வரை இருக்கும், லோக்கல் மில்களில் கொள்முதல் செய்யும் மூடைகளின் மூலம் ஒரு மூடைக்கே இலாபம் 400 ரூபாய் வரை இருக்கும். ஒரு நாள் ஒன்றுக்கு 10 மூடை மொத்தமாகவும் 5 மூடை சில்லறையாகவும் சென்றால் கூட ஒரு நாளைக்கே 5000 ரூபாய் வரை இலாபம் பார்க்க முடியும், நாள் ஒன்றுக்கு 50 மூடைகளை விற்கும் கடைகளும் இருக்கிறார்கள், உங்களது அணுகுமுறை மற்றும் திறனை பொறுத்து உங்களது இலாபம் அமையும்.