Book Shop Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில், புத்தக கடை வைப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Book Shop Business Ideas Tamil - என்ன தான் E Books, ஆன்லைன் கிளாசஸ், ஆன்லைன் மெட்டீரியல்ஸ் என்று யுகம் கொஞ்சம் அட்வான்ஸ் ஆனாலும் கூட புத்தகங்களுக்கான தனி மதிப்பு என்பது இன்னமும் இருக்க தான் செய்கிறது, மொபைல்களிலும், லேப்களிலும் நீண்ட நேரம் உட்கார்ந்து கூர்ந்து படிக்கும் போது அது கண்களை பாதிப்பதாக அமைகிறது, ஆனால் புத்தகத்தில் கண்களின் பார்வையை நகர்த்தி நகர்த்தி படிக்கும் போது அது கண்களுக்கான ஒரு யோகா பயிற்சியாக அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சரி, புத்தக கடை எப்படி அமைப்பது? முதலீடு என்ன?
புத்தகங்களை பொறுத்த வரை அதில் நிறைய வகைகள் இருக்கிறது, முக்கியமாக என்ன என்ன புத்தகங்கள் கடைகளில் இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம், போட்டி தேர்வுகளுக்காக பப்ளிகேசன் புத்தகங்கள், அகாடமி புத்தகங்கள், கவிதை, கதை புத்தகங்கள், பள்ளி கைடுகள், காலேஜ் கைடுகள், ஆன்மிக புத்தகங்கள், மாதாந்திர இலக்கியங்கள், மாதாந்திர நடப்பு நிகழ்வு புத்தகங்கள், பிரெய்லி புத்தகங்கள் என அனைவரும் தேடும் புத்தகங்களை எல்லாம் தேடி தேடி கடை முழுக்க நிரப்பிட வேண்டும்.
புத்தகங்களை வாடிக்கையாளர்களே எளிதாக தேடி எடுத்து கொள்ளும்படி அடுக்கி வைத்தல் மிக மிக அவசியம், எதுவும் இல்லை என்று சொல்லாமல் அனைத்து புத்தகங்களும் ஸ்டாக் இருக்கும்படி செய்தலும் மிக மிக அவசியம், ஒரு நார்மலான புத்தக கடை வைப்பதற்கு ஒரு 5 இலட்சம் வரை முதலீடு அவசியமாக இருக்கும், ஒரு பிரம்மாண்டமான புத்தக கடை வைப்பதற்கு ஒரு 8 முதல் 10 இலட்சம் வரையிலான முதலீடு அவசியமாக இருக்கும். இது போக கடையை முறையாக ஆவணப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
டெலிவரி, ஈ கமெர்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் கடைகளோடு இணைத்திட வேண்டும், அவ்வாறு செய்திடும் போது விற்பனையை இன்னும் பெருக்கி விட முடியும், புதியதாக ஏதாவது ஒரு புத்தகம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதன் முதல் பதிப்பை நேரடியாக உங்கள் கடைக்கு வரும் படி வழிவகை செய்திடல் வேண்டும், அது புத்தக காதலர்களை உங்கள் கடையை தேடி மென்மேலும் வர வைக்கும், கடையை தெளிவாக அழகாக பராமரித்தல் என்பது மிக அவசியம், கடைக்குள் ஒரு நூலகமும் இருந்தால் அது இன்னும் பெட்டர்.
சரி, புத்தக கடையில் இலாபம் எப்படி இருக்கும்?
புத்தகங்களை பொறுத்தவரை குறைந்தபட்சம் ஒரு புத்தகத்திற்கு 60 முதல் 70 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், ஒர் சில புத்தகங்களுக்கு 100 சதவிகிதம் வரை கூட இலாபம் இருக்கும், ஒரு நாளைக்கு 50 புத்தகங்கள் விற்றால் கூட, நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாய் முதல் 12,000 வரை இலாபம் மட்டும் தனியாக நிற்கும், மாதத்திற்கு என்று பார்த்தால் 3.5 இலட்சம் வரை 4 இலட்சம் வரை இலாபம் இருக்கும்.