சரி முதலில் எப்படி பானி பூரி கடை ஆரம்பிப்பது?
பெரிய முதலீடு தேவை இல்லை என்றாலும் கூட, நீங்கள் போடும் ஸ்டாலை பிரம்மிப்பாக்க வேண்டும், குட்டி ஸ்டாலை கொஞ்சம் அழகாக வடிவமைத்து, நிறைய லைட்டிங்ஸ் எல்லாம் வைக்க வேண்டும், கடைக்கு அழகான பெயர் ஒன்றை சூட்டி அதையும் அந்த ஸ்டாலில் லைட்டிங்காக வடிவமைத்தால் நல்லது, உங்களது முதலீட்டில் அதிக செலவை எடுத்துக் கொள்வது ஸ்டால் ஆக தான் இருக்க வேண்டும்.
சாதாரணமாக பார்த்து இருப்பீர்கள் பானி பூரி கடைகளின் பெயரை பானி வெட்ஸ் பூரி, பானி லவ்ஸ் பூரி இது போல ஏதாவது வித்தியாசமான பெயரை வைத்தால் வாடிக்கையாளர்களை அது எளிதாக கவரும், பானி பூரி செய்வதற்கான துணை பொருள்களின் செலவு மிக மிக கம்மி தான், நீங்கள் கடையை நன்றாக வடிவமைக்கும் பொருட்டே வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.
சரி பானி பூரி கடையில் இலாபம் எப்படி இருக்கும்?
நீங்கள் ஒரு கடையை அலங்காரமாக அமைப்பதற்கான செலவு மட்டுமே இங்கு அதிகம், ஒரு முறை முதலீடு போட்டு வாடிக்கையாளர்களை இழுத்து விட்டால் அதற்கு பின் நிறுவனம் இலாபத்தை நோக்கி மட்டுமே நகரும், ஒரு பிளேட் பானி பூரி தற்போதெல்லாம் 50 ரூபாய் வரை விற்கிறார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 50 பிளேட் விற்றால் கூட நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் சம்பாதிக்க முடியும்.
இலாபம் மட்டும் தனியாக ரூபாய் 1000 முதல் 1500 வரை கையில் நிற்கும், மாலை மட்டும் ஒரு நான்கு மணி நேரம் வைத்தால் போதும் என்பதால் காலையில் வேறு ஒரு தொழில் கூட உங்களால் செய்ய முடியும். குறைந்த நேரம் நிறைய இலாபம் வேண்டுபவர்களுக்கு பானி பூரி தொழில் ஒரு அட்டகாசமான தொழில். மாதம் என்று எடுத்துக் கொண்டால் 30,000 முதல் 40,000 வரை உங்களால் இலாபம் மட்டும் தனியாக கையில் பெற முடியும்.