• India
```

மாடியில் புதினா வளர்ப்பு...சிறிய முதலீடு போதும்...மாதம் ரூ 10000 வரை வருமானம்...!

Pudina Farming Business

By Ramesh

Published on:  2025-01-03 23:30:24  |    2177

Pudina Farming Business Ideas - நல்ல வருமானம் தரும் வகையில் வீட்டிலேயே புதினா வளர்ப்பில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pudina Farming Business - வீட்டில் அல்லது ஏதேனும் விழா வைபவங்களில் ஏதாவது குருமா அல்லது அசைவ சமையல்கள் செய்யும் போது புதினா இல்லாமல் யாரும் செய்வதில்லை, புதினா ஆனது குருமா மற்றும் ஒரு சில அசைவ உணவுகளுக்கு முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது, அந்த வகையில் புதினா வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுவாக வீட்டில் இருந்தே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், உங்களிடம் மொட்டை மாடி இருக்கும் பட்சத்தில் மொட்டை மாடியிலியே புதினா வளர்ப்பில் ஈடுபடலாம், நல்ல தரமான ஆர்கானிக் விதைகளை வேளாண்மை கல்லூரிகளில் வாங்கிக் கொள்ளலாம், மாடியில் குடில் அமைத்து, குடிலுக்குள் ரேக்குகள் அமைத்து தொட்டிகளில் மண் நிரப்பி விதைகளையிடலாம்.



குடிலை எப்போதும் ஈரப்பதமான சூழலில் வைக்க சணல் சாக்குகளை குடில் சுவரில் மாட்டி, அந்த சாக்குகளில் தண்ணீர் தெளிக்கலாம், ஒரு 20 முதல் 25 நாட்களிலேயே புதினா துளிர்க்க துவங்கி விடும், 45 நாட்களில் அறுவடை செய்யலாம், பொதுவாக வாரத்தில் சனி, ஞாயிறு நாட்களில் தான் மக்கள் அதிகமாக புதினாவை தேடுவர், அந்த நாட்களில் புதினாவை அறுவடை செய்து சந்தைப்படுத்தலாம்.

உங்கள் வீடுகளில் இருக்கும் காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வாரம் இரு முறை நேரடியாக டெலிவரி செய்தால் கூட மாதம் ரூ 8000 முதல் 10000 வரை வருமானம் பார்க்கலாம், வெட்ட வெட்ட வேர் விட்டு வளரும் தன்மையுடது புதினா என்பதால் ஒரு முறை பயிரிட்டால் நீண்ட காலம் வருமானம் தரும், 1 கிலோ புதினாவின் மதிப்பு ரூ 120 முதல் 150 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது.

" வீட்டில் இருந்தே ஏதாவது சிறிய வருமானம் பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு புதினா வளர்ப்பு சிறந்த தொழிலாக அமையும் "