• India
```

பெட்ரோல் டீசலை விட...அதிக இலாபம் தரும் ட்ரக் தண்ணீர் டெலிவரி...!

Lorry Water Delivery Business Ideas

By Ramesh

Published on:  2024-11-12 16:56:35  |    965

Lorry Water Delivery Business Ideas - பொதுவாக இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆகும் தண்ணீரின் செலவு 130 லிட்டர் முதல் 300 லிட்டர் வரை ஆகிறது, குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையலுக்கு என்று எல்லாமும் அதில் சேரும், இதை விட அதிகமாக பயன்படுத்துபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள், குடும்பத்திற்கு என்று மட்டும் அல்லாமல் கமெர்சியலாகவும் ஒரு சில சிறுகுறு நிறுவனங்களுக்கும் தண்ணீர் என்பது தினசரி அத்தியாவசியமாகிறது.

மெக்கானிக் ஷாப், வல்கனைசிங் ஷாப், ஹோட்டல்கள் என பலவைகளும் அதனுள் அடங்கும், அனைவருக்கும் பைப் வழி கார்பரேசன் வாட்டரை கொண்டு சேர்ப்பது என்பது பெரும்பாலான மாவட்டங்களில் சாத்தியம் இல்லாததாக தான் இருக்கிறது, ஒரு சிலர் டேங் கட்டி விட்டு போர் தண்ணீரை நிரப்புகின்றனர், நல்ல தண்ணீருக்கு தனியாக டேங் வைத்து லாரிகள் மூலம் அதை நிரப்புகின்றனர்.



எளியவர்களுள் சிலர் தண்ணீர் லாரி வரும் போது குடங்களை வரிசையில் வைத்து வீட்டு உபயோகத்திற்கு மட்டும் அவர்களிடன் பணம் கொடுத்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர், ஏரி, குளங்கள் எல்லாம் வற்றிப்போவதால் பெரும்பாலும் தண்ணீர் என்பது தற்போதெல்லாம் பெரும்பாலான இடங்களில் லாரிகள் மூலம் தான் சப்ளை செய்யப்படுகிறது.

சரி, அந்த வகையில் அதை ஒரு சேவையாகவும், தொழிலாலவும் எப்படி செய்யலாம், முதலில் லாரிகள் வாங்க வேண்டும், கமெர்சியல் டேங்க் லாரிகள் டேங்குகளோடு டாடா, ஹீண்டாய் நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன, 5000 லிட்டர் முதல் 25,000 லிட்டர் வரை சப்ளை செய்யக்கூடிய வகையில் ட்ரக்குகள், லாரிகள் என வகை வகையாக சந்தைகளில் நிறையவே இருக்கின்றன.



லாரிகள் தான் உங்களது அதிகபட்ச முதலீடாக இந்த தொழிலில் இருக்கும், குறைந்த பட்சம் ஒரு 65 இலட்சம் கையில் இருப்பது அவசியம், இரண்டு லாரிகள் வாங்கி அதை கமெர்சியல் லாரிகளாக ரிஜிஸ்டர் செய்து கொண்டு, தண்ணீர் சப்ளை செய்ய மாநகராட்சிகளிடம் அனுமதியும் பெற்றுக் கொள்ள வேண்டும், முதலீட்டிற்கான செலவுகளை ஒரு 80 சதவிகிதம் வரை கடனாக மூலம் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை பெறுவதற்கு ஏதாவது வாட்டர் பிளான்ட்களை தேடிக் கண்டு பிடித்து அவர்களிடம் வாடிக்கையாளர்கள் ஆகி விட வேண்டும், பொதுவாக ஒரு 10,000 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் நிரப்புவதற்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கேட்கிறார்கள், சந்தைகளில் ஒரு லிட்டர் நிரப்பி விட்டு நேரடியாக ஒரு குறிப்பிட்ட டைமிற்கு தெருக்களில் சென்றால் போதும் ஒரு 2 மணி நேரத்தில் காலி ஆகி விடும்.



பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட லாரி தண்ணீர் 20 லிட்டர் அதாவது ஒரு குடம் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கிறார்கள், ஒரு நாளைக்கு 4 நடை மாநகரம் முழுக்க அடித்தால், 40,000 லிட்டர்,  2000 குடம் அப்படி என்றால் ஒரு நாளுக்கு 20,000 ரூபாய் வருமானம், நீங்கள் தெருக்களில் மட்டும் தான் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை, ஒரு சில ஹோட்டல்களுக்கும், பிளாட்டுகளுக்கும், வீடுகளுக்கும் சென்று கூட நிரப்பலாம்.

நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் லிட்டர் வரை விநியோகம் செய்யும் தண்ணீர் லாரிகளும் சென்னைகளில் இருக்கின்றன, எந்த அளவிற்கு தொழிலை விரிவு படுத்துகிறோமோ, அதாவது நிறைய காண்டாக்டுகளை பெறுகிறோமோ, அந்த அளவிற்கு அதிகமாக இலாபம் பார்க்க முடியும், தண்ணீர் என்பது பெட்ரோல், டீசலை விட அதிக இலாபம் தரக்கூடியது, சரியான திட்டமிடல் இருந்தால் நாள் ஒன்றுக்கு கூட 40,000 முதல் 50,000 வரை வருமானம் ஈட்ட முடியும்.