• India
```

கூழ் கடை...தினசரி 3 மணி நேரம் மட்டும் போதும்...மாதம் ரூ 15000 வரை வருமானம்...!

Koozh Kadai Ideas Tamil

By Ramesh

Published on:  2024-12-23 16:32:16  |    542

Koozh Kadai Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் ஒரு கூழ் கடை வைப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Koozh Kadai Ideas Tamil - பெருகி வரும் புது புது நோய்களின் மீதான அச்சத்தினாலோ அல்லது தன் மீது அக்கறை தன் குடும்பத்தின் மீது அக்கறை என்பதினாலோ, தற்போதெல்லாம் மக்கள் பாரம்பரிய உணவுகளை நோக்கி செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர், அந்த வகையில் தற்போது மக்களிடையே கூழ் கடை என்பது சற்று பிரபலம் ஆகி வருகிறது, குளிர்காலம், வெயில் காலம் என இரண்டுக்கும் ஏற்ற பானம் என்பதால் எல்லா நேரமும் கூழ் கடை கல்லா கட்டும்.

பொதுவாக கூழ்கடை வைப்பதற்கு ஒரு தள்ளுவண்டி, நான்கைந்து பானைகள், கிளாஸ்கள் போன்றவைகள் முதலீடாக இருந்தால் போதும், கம்மங்கூழ், கேப்பை கூழ், அரிசி சீரக கஞ்சி போன்றவைகளை கூழ் கடையில் வைக்கலாம், கூழ்க்கு சைடிஸ் ஆக பொறித்த அப்பளம், ஏதாவது ஒரு ஊறுகாய், பொறித்த கருவாடு உள்ளிட்டவைகள் பொதுவாக வைக்கலாம்.



வெயில் காலங்களில் மண் பானைகளில் வைக்கலாம், குளிர்காலங்களில் சூடாக கொடுக்கலாம், கடையை பொறுத்தமட்டில் சாலையோர கடையாகவோ நல்ல மார்க்கெட் சைடுகளிலோ வைக்கலாம். ஒரு கடையாக வைக்கிறீர்கள் என்றால் பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கடையை ஆவணப்படுத்துக் கொள்வது நல்லது, தள்ளுவண்டியில் வைக்கிறீர்கள் என்றால் தேவையில்லை.

பொதுவாக ஒரு 300 மி.லி கூழ் ஒரு கிளாஸ் ரூ 25 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, ஒரு நாளைக்கு மதியம் 11 மணி முதல் 1 மணி அல்லது 2 மணி வரை வைத்தால் கூட குறைந்தது ஒரு 40 பேரையாவது அணுக முடியும், அந்த வகையில் தினசரி ரூ 1000 வரை கூழ் கடையில் வருமானம் பார்க்க முடியும், இலாபத்தை பொறுத்தவரை கூழ் கடையின் மூலம் மாதத்திற்கு ரூ 15000 வரை கையில் நிற்கும்.