Lotus Chocolate Share Price -முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லோட்டஸ் சாக்லேட், 9 நாட்களில் 52% வருவாயை அள்ளி நிதி உலகில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், லோட்டஸ் சாக்லேட் 4700% லாபம் பெற்று அசத்தியுள்ளது.
2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், லோட்டஸ் சாக்லேட்டின் நிகர லாபத்தில் 4700.87% அளவிற்கு அதிரடி வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், 337.4% அளவுக்கு வருமானம் அதிகரித்து, லாபம் ரூ.19.60 லட்சத்தில் இருந்து ரூ.9.41 கோடி ஆக உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சி, லோட்டஸ் சாக்லேட்டை வர்த்தக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்த்தி நிறுத்தியுள்ளது.