• India
```

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேசன் எப்படி வைப்பது...அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்...?

How To Start Electric Vehicle Charging Station In India

By Ramesh

Published on:  2024-12-02 03:54:25  |    814

How To Start Electric Vehicle Charging Station In India - இந்தியாவில் தற்போது வரை கிட்டதட்ட 3 மில்லியன்களுக்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல், எலக்ட்ரிக் கார்களின் விற்பனை என்பது கிட்டதட்ட 55% இந்தியாவில் அதிகரித்து இருப்பதாக தகவல், விற்பனைக்கு ஏற்ப எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேசன்கள் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒட்டு மொத்தமாகவே ஒரு 12,500 எலக்ட்ரிக் கார் சார்ஜிங் ஸ்டேசன்கள் தான் இந்தியாவில் இருப்பதாக தகவல், அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேசன்கள் அமைப்பதற்கான தேவை என்பது தேசத்தில் இருக்கிறது, எந்த ஒரு தொழிலும் துவங்கும் போது அதற்கான தேவை என்ன, அந்த தொழிலுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டியது அவசியம்.



அந்த வகையில் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேசன்களுக்கான எதிர்காலம் என்பது நன்றாகவே இருக்கிறது, பொதுவாக எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேசன்களுக்கு லைசென்கள் என்று எதுவும் வாங்க தேவையில்லை, டாடா பவர், சார்ஜ் + ஷோன், PlugNGO, EVQ பாயிண்ட் சர்வீஸ் புரொவைடர்களிடம் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேசனுக்கு ஆதாரைசேசன் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் பெரிய அளவில் நிறைய வாகனங்களுக்கான சார்ஜ் வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் அமைக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒரு 50 முதல் 70 இலட்சம் செலவுகள் ஆகலாம், வங்கிகளில் இதற்கு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன, அரசு சார்பில் மானியங்களும் வழங்கப்படுகின்றன, பொதுவாக ஒரு எலக்ட்ரிக் காருக்கு வீட்டில் சார்ஜ் செய்வதை விட ஸ்டேசன்களில் விதிக்கப்படும் விலை கம்மி தான்.

" பொதுவாக ஒரு காருக்கு முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ரூ 180 முதல் 450 வரை வசூலிக்கப்படுகின்றன, பெட்ரோல், டீசல் பங்குகளை விட சார்ஜிங் ஸ்டேசன்கள் நல்ல இலாபம் தரக்க்கூடிய தொழில் தான், இப்போதே துவங்குபவர்கள் எதிர்காலத்தில் இலட்சங்களில் இலாபங்களை அள்ளலாம் "