Variety Rice Hotel Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில், தள்ளு வண்டியில் வெரைட்டி ரைஸ் கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Variety Rice Hotel Ideas Tamil - வெரைட்டி ரைஸ் என்பது மதியம் மட்டுமே ஓடக்கூடிய உணவு வகை, மதிய உணவு வகை என்றாலும் கூட, காலை ஒரு 11 மணி அல்லது 11:30 மணிக்கே எல்லாம் ரெடி செய்து வைத்து விடுவது நல்லது. நகரத்தின் மையத்தில் போக்குவரத்திற்கு யாருக்கும் பாதிப்பில்லாத இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி விட வேண்டும், ஒரு சின்ன போர்டுகளில் கடைகளில் என்ன என்ன வெரைட்டி ரைஸ் கிடைக்குமோ அதை எழுதியோ, இல்லை போர்டாகவோ வைத்துக் கொள்வது வாடிக்கையாளர்களை கவரும்.
பொதுவாக வெரைட்டி ரைஸ் கடைகளில் தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம், பிரிஞ்சு சாதம், புளி சாதம் வைத்து இருப்பார்கள், பெரும்பாலும் அனைத்துமே ஒரே விலைக்கு தான் விற்பார்கள், சந்தைகளில் விற்கப்படும் விலை என்பது ஒரு வெரைட்டி ரைஸ் ரூ 40 முதல் 50 வரை இருக்கும், நீங்கள் இப்போது தான் துவங்குகிறீர்கள் என்றால் சராசரியாக ஒரு வெரைட்டி ரைஸ் ரூ 45 என விலை நிர்ணயம் செய்யலாம்.
விலை போர்டையும் பெரிதாக வைத்துக் கொள்வது வாடிக்கையாளர்களை கடைகளை நோக்கி இழுக்க அது ஒரு யுக்தியாக அமையும், 45 ரூபாயில் ஒரு வேளை உணவை முடித்து விடலாம் என்பதை உணர்ந்து அவர்களாகவே கடையை நோக்கி வருவதற்கு விலை போர்டு ஒரு உந்துதலாக அமையும், கடைகளை சுற்றி ஒரு சேர் போட்டு விட்டால் அமர்ந்து சாப்பிடுபவர்கள் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். பார்சல் வாங்குபவர்களுக்கு முன்னதாகவே பார்சல் போட்டு வைத்து விடுவது நல்லது.
பொதுவாக வெரைட்டி ரைஸ் கடைகளில் அதிகமாக ஓடுவது தக்காளி சாதமும், பிரிஞ்சு சாதமும் தான், அதற்கு அடுத்தபடியாக என்றால் தயிர் சாதம், லெமன் சாதமும், புளி சாதமும் ஓரளவுக்கு தான் ஓடும், அனைத்துமே நீங்கள் சுவையாக, தரமாக, கெடுதல் இல்லாத வேதிகளை சேர்க்காமல், நிறமிகளை சேர்க்காமல், கொடுக்கும் பட்சத்தில் மக்கள் அவர்களாகவே உங்கள் கடைகளை தேடி தேடி வருவதற்கு அது வாய்ப்பாக அமையும்.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
பொதுவாக நீங்கள் ரூ 45 என விலை நிர்ணயம் செய்யும் போது, ஒரு வெரைட்டி ரைஸ்க்கு சராசரியாக இருபது ரூபாய் இலாபம் இருக்கும், தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதத்தில் இலாபம் அதிகமாக இருக்கும், புளி சாதம், பிரிஞ்சு சாதத்தில் எல்லாம் இலாபம் கம்மியாக தான் இருக்கும், ஆனால் சராசரியாக எடுத்துக் கொள்ளும் போது நிச்சயம் ஒரு வெரைட்டி ரைஸ்க்கு 20 ரூபாய் இலாபம் மட்டும் தனியாக இருக்கும். ஒரு நாளைக்கு நீங்கள் 75 வெரைட்டி ரைஸ்களை விற்பனை செய்யும் போது இலாபம் மட்டும் தனியாக ஒரு 1500 ரூபாய் உங்கள் கைகளில் நிற்கும்.
" காலை 11 மணிக்கு ஆரம்பித்து விட்டு, மதியம் ஒரு 3 மணிக்கு முடித்தால் கூட, அந்த நான்கு மணி நேரத்தில் உங்கள் கைகளில் சம்பாத்தியமாக ரூ 3400 ரூபாய் இருக்கும், அதில் இலாபம் மட்டும் தனியாக ரூ 1500 ரூபாய் கைகளில் நிற்கும், நீங்கள் விற்பனையை அதிகரிக்கும் போது இந்த இலாபமும் இன்னும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை “