• India
```

8 கோடி வங்கி வேலை வேண்டாம் !ஒரு வருடத்தில் ரூ.28 கோடி வருமானம்!

Inspiring Business Stories | Today Business News In Tamil

Inspiring Business Stories -ஆண்டு ரூ.8 கோடி சம்பளத்துடன் வங்கி வேலையில் இருந்த ஒரு இளம் பெண், தனது சொந்த முயற்சியால் அதற்கு பல மடங்கு சம்பாதித்து வருகிறார். சிந்தனையும் புத்திசாலித்தனமும் இருந்தால் முடியாததை சாத்தியமாக்கலாம் என்பதை நிஷா ஷா என்ற பெண் நிரூபித்துள்ளார்.

லண்டனில் இருந்த கிரெடிட் அக்ரிகோல் வங்கியில் இணை இயக்குநராக 2,56,000 டொலர் (சுமார் ரூ.7.8 கோடி) சம்பளத்துடன் நிஷா 9 வருடங்கள் பணியாற்றினார். ஆனால், அந்த வேலையால் திருப்தி கிடைக்கவில்லை. பிறருக்கு உதவியும், சவாலான மற்றும் அறிவுப்பூர்வமான வேலையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவர், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.


வங்கி வேலை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு மட்டுமே உதவுகிறது, ஆனால் பொதுமக்களுக்கு உதவ வேண்டுமென்ற நிஷாவின் கனவால், தனது முயற்சியில் சொந்த யூடியூப் சேனலை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பத்தில், 1,000 சந்தாதாரர்களை அடைவதற்கு 11 மாதங்கள் எடுத்துள்ளது.ஆனால், 2022 செப்டம்பரில் தனது வாழ்க்கையைப் பற்றிய காணொளி வைரலானதன் மூலம் 50,000 சந்தாதாரர்களை கிடைத்துள்ளனர். இதனால், அவர் யூடியூப் மூலம் அதிக வருமானம் பெற ஆரம்பித்தார், மேலும் 2023 ஜனவரியில் வங்கி வேலையை ராஜினாமா செய்து முழு நேர யூடியூபராக மாறியுள்ளார்.

நிஷா, தனிப்பட்ட நிதி ஆலோசனைகள், பிரபலங்களின் நேர்காணல்கள், மற்றும் பிரபலமான நிறுவனங்களுடன் கூட்டணியில் வீடியோக்கள் உருவாக்கி, ஒரு வருடத்தில் ரூ.28 கோடி சம்பாதித்தார். இது அவர் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபித்தது. இன்று நிஷா, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக, தன் கனவுகளை விரும்பும் பாதையில் செல்கின்றார்.