• India
```

கைக்குட்டை தயாரிப்பு...சின்ன தொழில்...ஆனால் மாதம் 60000 வரை வருமானம்...!

Handkerchief Business Plan

By Ramesh

Published on:  2024-12-06 07:10:11  |    1596

Handkerchief Business Plan - நல்ல இலாபம் தரும் வகையில் கைக்குட்டை தயாரித்து அதை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Handkerchief Business Plan - கைக்குட்டை என்பது ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஒரு அத்தியாவசிய பொருளாக இருக்கிறது, பொதுவாக ஒரு தொழிலை தேர்ந்து எடுக்கும் போது, அந்த தொழில் மூலம் நாம் சந்தைப்படுத்தும் ஒரு பொருள் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை ஆனதா, அதிகமாக சந்தைப்படுத்த முடியுமா என்பதை உணர்ந்த பின்னர் தான் தொழிலையே துவங்க வேண்டும்.

அந்த வகையில் கைக்குட்டை தயாரிப்பு ஒரு அட்டகாசமான தொழில் தான், தொழில் முனைய நினைக்கும் பெண்களுக்கும், கடைகள் ஏதும் இல்லாமல் வீட்டிலேயே தொழில் துவங்க நினைப்பவர்களுக்கும் ஒரு சிறந்த தொழிலாக கைக்குட்டை தயாரிப்பு இருக்கும், வீட்டில் ஒரு தையல் மெசினும், கொஞ்சம் வித விதமான காட்டன் துணிகளும் கைக்குட்டை தயாரிப்பிற்கு போதும்.



நல்ல தரமான காட்டன் துணிகளை வித விதமாக மொத்த துணிக்கடைகளில் எடுத்துக் கொள்ளலாம், பின்னர் அனைத்தையும் சதுரமாக வெட்டி மெசின்களில் தைத்து கைக்குட்டை வடிவமைத்துக் கொள்ளலாம், பின்னர் கைக்குட்டையை சந்தைப்படுத்துவதற்கு சின்ன சின்ன கடைகள், துணிக் கடைகள், பேன்சி கடைகள் ஆகியவற்றுடன் ஒரு இணக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒற்றை ஆளாக செய்கிறீர்கள் என்றால் நாள் ஒன்றுக்கு ஒரு 200 கைக்குட்டைகள் தயாரித்து அன்றே சந்தைப்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம், ஒரு கைக்குட்டை ரூ 20 முதல் 30 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, நீங்கள் கடைகளுக்கு ரூ 10 முதல் 20 வரை விலை நிர்ணயம் செய்யலாம், நாள் ஒன்றுக்கு 200 கைக்குட்டைகளை சந்தைப்படுத்தினால் தினசரி ரூ 2000 வரை சம்பாதிக்கலாம்.

" சராசரியாக மாதம் ரூ 60,000 வரை சம்பாதிக்க முடியும், கொஞ்சம் ஆள் போட்டு செய்தால் அதிகமான கைக்குட்டைகளை சந்தைப்படுத்தலாம், மாதம் இத்தொழிலில் இலட்சங்களில் கூட இலாபம் பார்க்க முடியும் "