• India
```

அடேங்கப்பா, வாழை பயிரிடலில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?

Organic Farming Business Plan In Tamil | Village Business Ideas In Tamil

By Dharani S

Published on:  2024-09-23 16:03:01  |    351

Organic Farming Business Plan In Tamil -உலகில் வாழை என்ற ஒரு தாவரம் மட்டுமே, அதன் உச்சி முதல் பாதம் வரை விவசாயிகளுக்கு இலாபம் தரக்கூடியது. சரி அதன் எந்தெந்த பொருள், எந்தெந்த வகையில் இலாபம் தருகிறது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.

Village Business Ideas In Tamil-வாழை என்பது பொதுவாக தென் தமிழகம் மற்றும் கிழக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பயிரிடப்படும் தமிழகத்தின் ஒரு மேஜரான பயிர் வகையாக தான் பார்க்கப்படுகிறது. பொதுவாக மண் ஒத்துழைக்கும் போது வாழையை நிலத்தில் வருடம் முழுவதும் பயிரிடலாம். வாழை நட்டலை பொறுத்தவரை அடர் பயிரிடல் அதிக இலாபம் தரும் என விவசாயிகள் கூறுவார்கள். பொதுவாக ஒரு ஏக்கரில் 1,400 வாழை வரை பயிரிடலாம் என விவசாயிகள் கூறுகின்றனர். இது வாழைக்கு ஏற்ப அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம், இங்கு சராசரியாக எண்ணங்கள் தரப்பட்டு இருக்கிறது.

சரி, வாழையில் என்ன என்ன பொருட்கள் இலாபம் தரும்?

முதலில், இலையில் வரும் இலாபத்தை பார்க்கலாம்

பொதுவாக, வாழையில் இலை, தண்டு, காய், கனி, நார், கன்று என அனைத்துமே இலாபம் தரக்கூடியது தான், வாழை நட்டவுடன் ஒரு 7 மாதத்திலேயே இலை அறுக்க ஆரம்பித்து விடலாம், வாழையை இலைக்காக மட்டும் பயன்படுத்துபவர்கள் கிட்டதட்ட 2 வருடங்கள் நட்டிய வாழையில் இலை அறுப்பு செய்யலாம். நன்றாக பராமரிக்கும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் வரை இலை மகசூல் என்பது இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு வருடத்திற்கு 150 நாட்கள் மட்டும் இலை அறுக்கிறோம் என வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு 1,000 இலைகள் மார்க்கெட்டுக்கு செல்கிறது என்றால், ஒரு இலையின் விலை குறைந்தபட்ச நிர்ணய விலையாக ரூ 1.5 ரூபாய் என வைத்துக் கொண்டால், வருடத்திற்கு இலையில் மட்டும், 2,25,000 இலட்சம் சம்பாதிக்க முடியும். இங்கு இலை அறுக்கும் நாள், நாள் ஒன்றுக்கும் அறுக்கப்படும் இலை, விலை எல்லாமே சராசரியாக தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை நாட்களில் ஒரு இலையில் விலை 5 ரூபாய், 10 ரூபாய் கூட செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, சராசரியாக கழிவு, விலை நிர்ணயம் எல்லாம் கணக்கிலிட்டு பார்க்கும் போது ஒரு வருடத்திற்கு 2,25,000 இலையில் சம்பாதிக்க முடியும்.


சரி, அடுத்து தாருக்கு வருவோம்,

ஒரு ஏக்கரில் குறைந்த பட்சம் 1,400 வாழைகள் பயிரிட்டு அதில் ஒரு 1,200 தார்கள் நல்ல விளைச்சலில் வருகிறது எனக்கொள்வோம். மார்க்கெட் விலை மாரிக்கொண்டே இருக்கலாம், அந்த பட்சத்தில் ஒரு தாரின் சராசரி விலை ரூபாய் 200 என வைத்துக் கொள்வோம்.அவ்வாறாக ஒரு சாகுபடியில் 2,40,000 ரூபாய் சம்பாதிக்க இயலும்.

சரி அடுத்து தண்டு மற்றும் பூவிற்கு வருவோம்

மார்க்கெட்டில் 1 கிலோ தண்டு ரூபாய் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எப்படியும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் போது ஒரு 10 ரூபாய்க்கு எடுக்கிறார்கள் என வைத்துக் கொண்டால், ஒரு வாழையில் 2-3 கிலோ வரை சராசரியாக தண்டு கிடைக்கும். அவ்வாறாக 1,400 வாழைகள் என எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சம் ஒரு 3,000 கிலோ தண்டுகள் சேருமானால், தண்டில் மட்டும் ஒரு சாகுபடியில் 30,000 சம்பாத்தியம் பார்க்கலாம். கிட்ட தட்ட ஒரு பூவும் 10 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் 1,400 தாருக்கு நிகர இலாபம் ஒரு 30,000 வைத்துக் கொள்வோம். ஒட்டு மொத்தமாக தண்டு மற்றும் பூவில் மட்டும் குறைந்த பட்சம் 60,000 சம்பாதிக்க முடியும்.

சரி, அடுத்ததாக நாருக்கு வருவோம் 

Organic Farming Business Plan In Tamil-பொதுவாக வாழை நார்கள் தற்போது கயிறு, ஆடைகள், பட்டுகள், சேலைகள் பின்னலில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ நன்றாக காய்ந்த வாழை நார் மார்க்கெட்டுகளில் குறைந்த பட்சம் 150 ரூபாய் வரை எடுக்கப்படுகிறது. ஒரு வாழையில் குறைந்த பட்சம் அரைக்கிலோ நார் எடுக்க முடியும் என வைத்துக்கொள்வோம், அது காயும் போது 300 கிராம் எடை ஆகிறது என வைத்துக் கொண்டால் 1,400 தார்களில் 420 கிலோ வகையில் நார்கள் எடுக்க முடியும். ஒரு கிலோ 150 ரூபாய் என்னும் போது, 420 கிலோவிற்கு 63,000 சம்பாதிக்க முடியும். 

ஒட்டு மொத்தமாக ஒரு ஏக்கரில், 1,400 வாழையில், இலை, பூ, தண்டு, வாழை, நார் ஆகியவற்றின் மூலம் ஒரு விவசாயி சம்பாதிக்கும் ஒட்டு மொத்த சம்பாத்தியம், 5,88,000 ரூபாய் ஆக இருக்கிறது. இது ஒரு சராசரியான சம்பாத்தியம் மட்டுமே. இதில் ஒரு இலட்சம் பரமாரிப்பு, போக்குவரத்து செலவு என்று எடுத்துக் கொண்டால் கூட, குறைந்த பட்சம் 5 இலட்சம் கையில் நிற்கும். இதை விட ஒரு விவசாயி நினைத்தால் அதிகமாகவும் சம்பாதிக்க முடியும், இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் வந்தால் அந்த சம்பாத்தியம் குறையவும் செய்யலாம்.

 வாழை விவசாயிகள் பெரும்பாலும் வாழையில் வருடத்திற்கு 10,000 கிடைப்பதே பெரும்பாடு என சொல்லி தான் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் அது அப்படி இல்லை, சரியான திட்டமிடலும், சரியான சந்தைப்படுத்துதலும் இருந்தால் வாழையை விட இலாபம் தரும் பயிர் வேறு ஏதும் இல்லை