Vehicle Parking Business -வாகன காப்பகம் எப்படி வைப்பது?, வாகன காப்பகம் வைப்பதன் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்க முடியுமா? என்பது குறித்த தகவல்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
வாகன காப்பகம் எப்படி வைப்பது?
வாகன காப்பகம் வைப்பதற்கு முதலில் பரந்து விரிந்த ஒரு இடம் தேவை, இடம் கிடைத்து விட்டால், அந்த இடத்திற்கான முறையான ஆவணங்களை மாநகராட்சியில் சமர்ப்பித்து , வாகன காப்பகம் வைப்பதற்கான உரிமம் வாங்கி கொள்ள வேண்டும். விடப்படும் வாகனங்களை வெயிலோ, மழையோ பாதிக்காத வகையில் ஷீட் போட்டு வைத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. கண்காணிப்பு கேமராக்கள் இருப்பது மிக மிக அவசியம், டிஜிட்டல் முறையில் டோக்கன்கள் விநியோகிப்பது கூடுதல் பாதுகாப்பு. மக்கள் பெருக்கம் மிகுந்த இடத்தில் வைப்பது மிக மிக அவசியம்.
முக்கியமாக பஸ் ஸ்டாண்டுகள் அருகிலும், ஒரு மாநகரின் மையத்திலும் வைக்கும் போது வாகனத்தை நிறுத்திச் செல்ல அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
சரி, வாகன காப்பகம் என்பது இலாபகரமான தொழிலா?
ஆம், வாகன காப்பகம் என்பது இலாபகரமான தொழில் தான், ஒரு முறை முதலீடு போட்டு விட்டால், அப்புறம் உட்கார்ந்து டோக்கன் அடிக்கும் வேலை மட்டும் தான். ஒரு நாளுக்கு பைக்குகளுக்கு 20 ரூபாய், கார்களுக்கு 40 ரூபாய் என விலை நிர்ணயித்தால், ஒரு நாளுக்கு 20 கார்கள், 30 பைக்குகள் செட்டுக்குள் வந்தாலே, நாள் ஒன்றுக்கு, ரூபாய் 1,400 சம்பாதிக்க முடியும், இதை விட அதிகமாக தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள், ஆனாலும் இது ஒரு குறைந்த பட்ச ஊதியம் ஆக எடுத்துக் கொள்ளலாம்.
"பொதுவாக, வாகன காப்பகத்தை குத்தகைகள் மூலம் எடுப்பதைக் காட்டிலும் சொந்தமாக எடுத்து நடத்துவதே அதிக இலாபம் தரும், சொந்தமான இடமாக இருந்தால் அது இன்னும் அதீத வசதி, கூடவே ஒரு பெட்ரோல் நிரப்பும் மையமும் அதோடு சேர்த்து வைத்தால், வண்டியை வந்து விடுபவர்கள் அங்கேயே பெட்ரோலும் நிரப்பி விட்டு செல்வர், ஒன்றில் இரண்டு இலாபங்களாக அமையும் "