Mudhalvar Marunthagam in Tamil - தமிழக அரசு மூன்று இலட்சம் மானியத்துடன் மருந்தகம் அமைக்க வழி வகை செய்து கொடுக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mudhalvar Marunthagam in Tamil - இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு கிட்டதட்ட 50 பில்லியன் டாலர் அளவிற்கு மருந்து என்பது நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது, பாராமெச்சுட்டிகல்ஸ் என்பது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய வர்த்தகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது, கிட்டதட்ட 60 சதவிகிதம் மக்கள் இந்தியாவில் நோய்வாய்படும் போது அவர்களின் வருமானத்தில் 72 சதவிகிதம் மருந்துக்காக செலவிடும் நிலை ஏற்படுபவதாகவும் தகவல்,
பொதுவாக பெரும்பாலும் மருந்து விற்பனை என்பது தனியார் விற்பனை மையங்களால் தான் அதிகம் நிறுவப்பட்டு இருக்கிறது, அதுவே அரசு எடுத்து நடத்தினால் மக்களுக்கு கொஞ்சம் எளிமையான விலையில் கொடுக்க முடியும், அதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு முதல்வன் மருந்தகம் என்ற பெயரில் ஒரு குறைந்த விலை மருந்தகத்தை ஏற்படுத்த முடிவு செய்து இருக்கிறது,
தமிழகம் முழுக்க 1000 மருந்தகங்கள் முதற்கட்டமாக அரசு துவங்க இருக்கும் நிலையில் தற்போது அதற்கான திட்டவடிவம் அரசால் கொடுக்கப்பட்டு இருக்கிறது, அதாவது 110 சதுர அடியில் மருந்தக அமைப்பு இருக்க வேண்டும், கடைக்கான ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும், வாடகை கடையாக கூட இருக்கலாம், பி.பார்ம் அல்லது டி.பார்ம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அவ்வாறாக இல்லையெனில் நீங்கள் ஓநராக இருந்து கொண்டு பி.பார்ம் அல்லது டி.பார்ம் முடித்தவர்களின் மேற்பார்வையோடு மருந்தகம் நடைபெறும் வகையிலும் செய்யலாம், மருந்தகத்திற்கு 3 இலட்சம் மானியமும் அரசு கொடுக்கிறது, அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் முதலில் 1.5 இலட்சம் விடுவிக்கப்படும், பின்னர் கடை அமைக்கப்பட்டதும் ஒரு 1.5 இலட்சம் மதிப்பீட்டில் மருந்துகள் வழங்கப்படும்.
சரி என்ன என்ன ஆவணங்கள் தேவை, எப்போது வரை பதிவு செய்யலாம்?
1) மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் அல்லது அவர்கள் உங்களோடு இணைந்து செயல்படுவதற்கான ஒப்புதல்,
2) 110 சதுர அடியில் சொந்த இடம் (அல்லது) வாடகை இடம், வாடகை இடம் என்றால் ஒப்பந்தம் அவசியம்,
3) ஜிஎஸ்டி ரிஜிஸ்ட்ரேசன் சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு,
4) கணினி, பில்லிங் வசதி, ரேக்குகள், குளிர்சாதன வசதி இருக்க வேண்டும்,
5) இணைய வசதி நிச்சயம் இருக்க வேண்டும்,
6) இடம் பொதுமக்கள் எளிதாக அணுக கூடிய இடமாக இருக்க வேண்டும்.
7) தகுதி இருப்பவர்கள் நவம்பர் 20 வரை https://mudhalvarmarundhagam.tn.gov.in/project என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.