• India
```

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரணின் மனைவி உபாசனா..அப்பல்லோ மருத்துவமனைப் பேரரசின் வாரிசு..!

 Apollo Hospital Owner Upasana | Upasana Kamineni Net Worth

 Apollo Hospital Owner Upasana -உபாசனா காமினேனி கொனிடேலா, அப்பல்லோ மருத்துவமனை குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை தொழிலதிபராக திகழ்கிறார். அப்பல்லோ மருத்துவமனைகளை நிறுவிய கோடீஸ்வரர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான அவர், CSR அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு, சமூக நலத்திற்கும் மருத்துவத் துறைக்கும் பெரும் பங்களிப்பை செய்து வருகிறார்.


34 வயதான உபாசனா, சமூக ஆரோக்கிய முயற்சிகளில் பெரும் ஈடுபாட்டுடன் செயல்படுவதோடு, URLife என்ற தனிப்பட்ட ஆரோக்கிய நிறுவனத்தை உருவாக்கி, அதன் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார். 2012ல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரணை திருமணம் செய்துகொண்ட இவர், இன்று தொழிலும், குடும்ப வாழ்க்கையிலும் சமநிலையைப் பேணிக்கொண்டு வருகின்றார்.மேலும், இவர்களுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ளார்.