Own Business Ideas in Tamil -பொதுவாக புரோட்டா என்பது தென் தமிழகத்தின் மிக மிக பேமஸ் ஆன ஒரு உணவு, தூத்துக்குடியை எல்லாம் எடுத்துக்கொண்டால் கால் வைத்த இடம் எல்லாம் புரோட்டா கடைகள் தான் இருக்கும், அந்த அளவிற்கு புரோட்டாவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் ஆகி இருக்கிறார்கள். சரி அந்த தொழிலை எப்படி துவங்கலாம் என பார்க்கலாம்.
சரி, புரோட்டா ஹோட்டல் என்பது எளிதா?
புரோட்டோ தொழில் என்பது கொஞ்சம் கடினமானது தான், ஆனால் மாஸ்டர்கள் நல்ல மாஸ்டர்கள் அமைந்து விட்டால் நல்ல வகையில் கல்லா கட்டலாம், பொதுவாக நீங்கள் எந்த மாவட்டத்தில் வைத்தாலும் கூடவே ஒரு தூத்துக்குடி அல்லது மதுரை புரோட்டா மாஸ்டரை கையில் வைத்துக் கொள்வது நல்லது, அவர்களுக்கு தான் அனைத்து வித புரோட்டோவும் சுவையாக செய்ய தெரியும், சால்னா, புரோட்டா ரெண்டும் சுவையாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிச்சயம் அள்ளும். ஆதலால் தான் மாஸ்டரை தேர்ந்து எடுப்பது என்பது மிக மிக முக்கியம்.
புரோட்டா கடையை பொறுத்தவரை மிக மிக முக்கியம் சுவை, சுவை இல்லாவிட்டால், ஒரு தடவைக்கு மேல் உங்கள் கடை வாசலை வாடிக்கையாளர்கள் மிக மிக அரிது, ஆதலால் தான் நல்ல மாஸ்டர்கள் என்பது ஒரு நல்ல இலாபம் தரும் புரோட்டா கடைக்கு மிக மிக அவசியம், பெரும்பாலும் நிறைய புரோட்டா கடைகள் மூடப்படுவதற்கு காரணம் நல்ல மாஸ்டர்கள் கிடைக்காதது தான்.
சரி, ஒரு புரோட்டா கடையில் எவ்வளவு இலாபம் இருக்கும்?
ஆரம்பத்தில் துவக்கத்தில் பெரிதாக ஓடாத சமயங்களில் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வரையில் தான் இலாபம் இருக்கும், புரோட்டா கடையை பொறுத்தவரை பிக் அப் ஆகி விட்டால் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் முதல் 20,000 வரை கூட இலாபம் இருக்கும், மாஸ்டருக்கு, பரிமாறுபவர்களுக்கு என்று ஒரு நான்காயிரம் சம்பளம் போனாலும் கூட 12,000 முதல் 14,000 வரை தினசரி இலாபம் இருக்கும்.
ஒரு நல்ல இடம் கிடைக்கும் பட்சத்தில் பெரிய முதலீடு செய்து நல்ல மாஸ்டர்களை வைத்துக் கொண்டு தைரியமாக புரோட்டா கடை துவங்கலாம், நிறைய வகைகள், நல்ல மாஸ்டர்கள், சால்னா வகைகள் எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிக் அப் ஆகி நல்ல இலாபத்தைக் கொடுக்கும்