Footwear Shop Ideas - ஓரளவிற்கு நல்ல இலாபம் தரக்கூடிய வகையில் காலணிகள் மற்றும் ஷூ கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Footwear Shop Ideas - பொதுவாகவே காலணிகள் மற்றும் ஷீக்கள் எல்லாம் தற்போது மக்களின் அத்தியாவசியங்கள் ஆகி விட்டது, அந்த காலத்தில் காலில் காலணிகள் இருப்பவர்களை பார்ப்பது கடினம், ஆனால் தற்போது காலில் காலணிகள் இல்லாதவர்களை பார்ப்பது கடினம், ஒவ்வொருவரும் ஆடைகளுக்கு ஏற்ப காலணிகளை வாங்கி அணியும் அளவிற்கு காலணிகள் மற்றும் ஷீக்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
ஒட்டு மொத்த தேசத்தின் காலணி உற்பத்தியில் தமிழகம் தான் முதன்மை வகிக்கிறது, அந்த வகையில் கடைக்கு தேவையான காலணிகளையும் ஷூக்களையும் தமிழகத்திலேயே கொள்முதல் செய்து கொள்ளலாம், பெரம்பலூர், ராணிபேட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் காலணிகள் தயாரிப்பில் முன்னனி வகிக்கின்றன, நேரடியாக அங்கு சென்று முதல் கொள்முதலை செய்து கொள்ளலாம்.
முதலீடு என்னும் போது கையில் ஒரு 5 இலட்சம் வைத்துக் கொள்வது நல்லது, அரசு கடன் உதவிகளையும் வழங்குகிறது, முத்ரா லோன் மூலம் வங்கிகளில் 90 சதவிகிதம் கடன் பெற்றுக் கொள்ளலாம், நல்ல மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கடை இருப்பது அவசியம், கடையை மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் லைசென்ஸ் எடுத்து ஆவணப்படுத்திக் கொள்வது அவசியம்.
இலாபத்தை பொருத்தவரை கம்பெனி காலணிகள் மற்றும் ஷூக்களுக்கு 15 முதல் 20% வரை இலாபம் இருக்கும், இதர லோக்கல் பிராண்ட்களுக்கு 40% முதல் 60% வரை இலாபம் இருக்கும். பெரிதாக ஆட்களும் தேவைப்பட மாட்டார்கள் என்னும் போது இலாப சதவிகிதம் அப்படியே கைக்கு வரும், எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறிய காலணி கடைகள் மூலமாகவே மாதம் ரூ 30,000 முதல் 45,000 வரை வருமானம் ஈட்ட முடியும்.