Alia Bhatt Clothing Brand -ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL), நடிகை ஆலியா பட் உருவாக்கிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு ஆடை பிராண்டான எட்-ஏ-மம்மா வில் 51% பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடபட்டது.
அமேசான், எட்-ஏ-மம்மா 2020 ஆம் ஆண்டு ஆலியா பட் தொடங்கிய பிராண்டாகும்.மேலும், இது 2 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கான ஆடைகளை விற்கிறது. ஆன்லைனில் துவங்கிய இந்த பிராண்டு, தளபாடங்கள், குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள், மற்றும் மகப்பேறு உடைகள் உள்ளிட்ட பல வகைகளிலும் விரிவாக்கம் கண்டுள்ளது.
RRVL இயக்குநர் இஷா அம்பானி, "நாங்கள் எட்பம் போல நிலைத்த வளர்ச்சியை முதன்மையாகக் கொண்ட பிராண்டுகளை எப்போதும் ஆதரிக்கிறோம். எட்-ஏ-மம்மா, சுற்றுச்சூழல் முறைகள் மற்றும் சமூக பொறுப்புகளைக் கொண்டு விவரங்கள் மீது கவனம் செலுத்துவதில் பாராட்டப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
ஆலியா பட், இந்த கூட்டாண்மை எட்பம் பிராண்டை மேலும் பல குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் கொண்டு செல்ல உதவும் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார். RVL, இந்தியாவில் 18,500 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களை இயக்கும் நிறுவனம், Gap, Pret-a-Manger போன்ற பிராண்டுகளின் உரிமைகளையும் முன் வைத்துள்ளது.