• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...கிராமங்களில் கால்நடை தீவன கடை..வைப்பது எப்படி...?

Cattle Feed Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-11-23 16:22:59  |    709

Cattle Feed Shop Ideas Tamil - கால்நடை தீவன கடை என்பது கிராமங்களில் நல்ல இலாபம் தரும் தொழிலாக இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Cattle Feed Shop Ideas Tamil - கால்நடை தீவன கடை என்பது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான உணவுகளை விற்கும் ஒரு கடை ஆகும், மாட்டு தீவனம், ஆட்டு தீவனம், புண்ணாக்கு வகைகள், தவிடு வகைகள், பருத்தி விதை, நவ தானிய வகைகள், இது போக புறா, முயல், லவ் பேட்ஸ், வளர்ப்பு மீன்கள் உள்ளிட்டவைகளுக்கான தீவனங்கள் என அனைத்தும் கிடைக்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும்.

கடை ஆரம்பிக்க முதலில் சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும், கிராமங்களோ அல்லது பேரூராட்சிகளோ சரியான இடங்களாக இருக்கும், தற்போது கால் நடை வளர்ப்பவர்கள் கிராமங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள், அந்த வகையில் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அந்த கடையை முறையாக பேரூராட்சிகளில் ஆவணப்படுத்தி லைசென்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.



கால்நடை தீவனங்களுக்கென்று பல தொழிற்சாலைகள் இருக்கின்றன, விருதுநகர், சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் பகுதிகளில் கால் நடை தீவனங்களை நீங்கள் மொத்த விலையில் வாங்க முடியும், ஒரு முறை நேரடியாக சென்று கொள்முதல் செய்து விட்டு, அதற்கு பின்னர் நீங்கள் அவர்களை மொபைல் மூலம் காண்டாக்ட் செய்து ஆர்டர்களை கொடுக்கலாம்.

முதலீட்டை பொறுத்தவரை ஒரு நான்கு முதல் ஐந்து இலட்சங்கள் வரை கடை அமைப்பதற்கு தேவைப்படும், அதை நீங்கள் கடனாக பெற்றால் கூட ஒரு 3 வருடத்தில் அடைத்து விட முடியும், வருமானத்தை பொறுத்தவரை நீங்கள் சரியான இடத்தை தெரிவு செய்து விட்டால் தினசரி ரூ 4,000 வரை 6,500 வரை வருமானம் பார்க்க முடியும், மாதத்திற்கு சராசரியாக 1,20,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் நிச்சயம் சம்பாதிக்க முடியும்.