Creative Galileo Company -முன்பு பாடசாலை ஆசிரியரான பிரேர்னா ஜுன்ஜுன்வாலா, இன்று ரூ.330 கோடியை உடைய நிறுவனத்தை நடத்துகிறார். அவர் IIT அல்லது IIM ல் பயின்று பட்டம் பெற்று பட்டதாரி ஆனவர் அல்ல, ஆனால் அவரது வெற்றிக் கதை அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடியது. அவரை பற்றி அவரின் வெற்றியின் உச்சம் பற்றி பார்க்கலாம்.
வெற்றிக்கதையுடன் பிரேர்னா,பிரேர்னா, சிங்கப்பூரில் "லிட்டில் பேடிங்டன்" என்ற மழலையர் பாடசாலையை நிறுவியவர். பின்னர், 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் "கிரியேட்டிவ் கலிலியோ" என்ற Edutech ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.
நூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம்,பிரேர்னா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். அவரது நிறுவனம் "Toondemy" மற்றும் "Little Singham" என்ற இரண்டு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இவை 1 கோடிக்கு அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ளன.
குழந்தைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட கற்றல், இந்த செயலி, குழந்தைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணம், கதை வீடியோக்கள் மற்றும் கேமிஃபிகேஷன் ஆகியவற்றை வழங்குகிறது.
மிகக் குறைந்த செலவிலான மார்க்கெட்டிங், பிரேர்னாவின் ஸ்டார்ட்அப் கடந்த ஆண்டு ரூ.330 கோடி முதலீடுகளை திரட்டியது, மற்றும் தற்போது 30 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.