• India
```

’எலான் மஸ்க்’ என்னும் சாதனையாளரின் வரலாறு!

Elon Musk History In Tamil | Elon Musk Life Story

Elon Musk History In Tamil -இன்று உலகளாவிய கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம்வரும் எலான் மஸ்க். இவர் ஒன்றும், தங்க தொட்டிலில் பிறந்து, தங்க தட்டில் சாப்பிட்டவர் எல்லாம் அல்ல.

தென் ஆப்பிரிக்கா, தான் எலான் மஸ்க்கின் பூர்விகம், தந்தை பொறியாளர், ஆகினும் கூட, அவர் ஒரு மிகப்பெரிய குடிகாரர், இதன் காரணமாகவே எலான் மஸ்க் சிறு வயதில் இருக்கும் போதே அவரின் தாயும் தந்தையும் பிரிந்து விடுகின்றனர்.மேலும், எப்படியோ பல இன்னல்களுக்கு மத்தியில் பள்ளிப்படிப்பை முடித்த எலான் மஸ்க், தன்னுடைய மேல் படிப்பை கனடாவில் முடிக்கிறார்.

சிறு வயதில் இருந்தே வீடியோ கேமில் ஆர்வம் மிக்கவர், அவர் முதன் முதலில் கோடிங் எழுதி அவரே படைத்த ’பிளாஸ்டர்ஸ்’ என்னும் வீடியோ கேம், அன்றைய காலக்கட்டத்தில் மார்க்கெட் விற்பனையில் 475 டாலரை அவருக்கு பெற்று தந்தது. அது தான் அவர் அவருடைய திறமையால், திறனால் ஈட்டிய முதல் சம்பளம். அதற்கு பின் படிப்படியாக உயர்ந்த எலான் மஸ்க் என்னும் சிகரம், PayPal, Zip 2, Solar City, Open AI, Space X, Tesla, Neura Link, Twitter என்று அனைத்து துறையிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்தார்.


Elon Musk Life Story -அனைத்திலும் வெற்றி மட்டுமே கண்டாரா என்றால் அது தான் இல்லை, அதற்குள் தோல்விகள் நிறைந்த வலிகள் நிறைந்த பல சரித்திரங்களும் இருக்கிறது. எலான் மஸ்க்கிடம் ஒரு அசாத்திய திறன் உண்டு, அதாவது உலகமே முடியாது என ஒரு விடயத்தை கூறினால் அதை உலகத்தின் முன் முடித்துக் காட்டுவார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் மொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டது. தொடர் தோல்விகளால் எலான் மஸ்க்கின் கட்டமைப்பு 2008 காலக்கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சுக்கு நூறாகி கொண்டு இருந்தது.

தானே களத்தில் இறங்கிய எலான் மஸ்க், தவறுகளை எல்லாம் குறுகிய காலக்கட்டத்திற்குள் சரி செய்து மீண்டும் தன் நிறுவனங்களை எல்லாம் வெற்றிப்பாதையில் அழைத்து சென்றார். பொதுவாக எலான் மஸ்க் என்பவரை பலருக்கும் ஒரு தொழிலதிபராக தான் தெரியும். ஆனால் அவர் ஒரு ஆகச்சிறந்த விஞ்ஞானி. இந்த எதிர் கால உலகத்திற்கு என்ன என்ன தேவையோ அதை உலகம் வடிவமைக்கும் முன், தான் வடிவமைக்க வேண்டும் என்று, கண்டு பிடிப்புகளின் மேல் தீரா காதல் கொண்டவர்.


நகைச்சுவை திறன் மிக்கவர், அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கல்களில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதிரடி நடவடிக்கைகளுக்கு பேர் போனவர் எலான் மஸ்க்.தன் முடிவுகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். அரசியல் ஆர்வமும் உண்டு. அவ்வப்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய அரசியலும் பேசுவார்.

“ ஒரு சரித்திரத்தை கட்டமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, எலான் மஸ்க் என்னும் தனி ஒரு மனிதன் கட்டமைத்து இருக்கும் அவருடைய சரித்திரம் என்பது இன்னும் பல யுகங்களுக்கு பேசப்பட்டு கொண்டே இருக்கும் என்பதில் பெரிதொன்றும் ஐயமில்லை. ஒட்டு மொத்தமாக எலான் மஸ்க் - தன்னை தானே செதுக்கியவன் “