Travel Agency Business Ideas Tamil - டிராவல் ஏஜென்ஸி ஒன்று வைத்து அதை நல்ல இலாபகரமான முறையில் இயக்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Travel Agency Business Ideas Tamil - பொதுவாக ஒரு டிராவல்ஸ் என்னும் போது அதை நிறுவ கோடிக்கணக்கில் செலவாகும், ஆனால் டிராவல் ஏஜென்சிக்கு அப்படி இல்லை ஒரு 10*15 ரூம், ஒரு வெயிட்டிங் ஹால், இணைய வசதியுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் ஒரு நாலைந்து பர்னிச்சர்கள், இது போக மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் உங்களது டிராவல் ஏஜென்சிக்கான ஒரு லைசென்ஸ் இவ்வளவே போதுமானதாக இருக்கும். நம் ஏரியாக்களில் அதிக புக்கிங் வருவது பஸ்சுக்கும், ட்ரெயினுக்கும் தான்.
அதற்கு ஏற்றார் போல உங்களது ஏஜென்சியை வடிவமைத்துக் கொள்ளலாம், அது போக உங்கள் ஏரியாவில் இயங்கும் அனைத்து டிராவல்ஸ்களுடனுனான ஒரு நல்லுறவு உங்களுக்கு இருக்க வேண்டும், சில டிராவல்ஸ்கள் ஏஜெண்ட்ஷிப் எடுக்க சொல்லுவார்கள், அதற்கு வருடத்திற்கு ஒரு 15,000 ரூபாய் செலவு ஆகலாம். அப்படியே உங்கள் ஏரியாவில் இயங்கும் கார்கள், ஆட்டோக்கள், வேன்கள், டூரிஸ்ட் பஸ்கள் உள்ளிட்டவைகளின் நம்பர்களும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்,
ஒட்டு மொத்தமாக ஒரு 2.5 இலட்சம் கையில் இருக்க வேண்டும், ட்ரெயின் தட்கல் ஏஜென்சியும் முடிந்தால் எடுத்து வைத்துக் கொள்ளலாம், பிளைட் புக்கிங் பெரிதாக யாரும் ஏஜென்சிகளிடம் செய்வதில்லை முடிந்தால் பெரிய ஏஜென்சியாக வைக்க போகிறீர்கள் என்றால் மட்டும் ஏதாவது ஒரு ஆன்லைன் ஏஜென்சிகளிடம் ஏஜெண்ட்ஷிப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், பொதுவாக ஒரு டிராவல் ஏஜென்சி நடத்துகிறீர்கள் என்றால் அங்கு நீங்கள் ஒரு இருவருக்கு இடையில் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒன்று வாடிக்கையாளர்கள், இன்னொன்று டிராவல்ஸ்கள், வாடிக்கையாளர்கள் ஒரு பஸ்சுக்கு புக் பண்ண வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு சீட் இல்லை என்று சொல்லாமல் புக்கிங் செய்து கொடுக்க கூடிய திறன் இருக்க வேண்டும், அதே சமயத்தில் நார்மலான நாட்களில் கூட டிராவல்ஸ்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க புக்கிங் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், வாடிக்கையாளர்களையும் டிராவல்ஸ் நிறுவனங்களையும் சமநிலையில் வைத்து கொள்ளும் போது உங்கள் ஏஜென்சி ஆட்டோமேட்டிக்காக வளரும்.
உங்களது ஏரியாவில் ஒரு 6 டிராவல்ஸ் ஓடுகிறது என வைத்துக் கொள்வோம் நீங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு 25 புக்கிங் ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள் என்றால் ஒரு புக்கிங்கிற்கு 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை கமிசன் கிடைக்கும் அது புக்கிங் செய்யும் நாளைப் பொறுத்தது, டிக்கெட் விலை சராசரியாக ரூ 800 என்று வைத்தால் கூட ஒரு புக்கிங்கிற்கு 160 ரூபாய் வரை கிடைக்கும், நாள் ஒன்றுக்கு 25 புக்கிங் என்னும் போது ஒரு நாளைக்கே ரூ 4,000 வரை இலாபம் கிடைக்கும்.
இது போக உங்களுக்கு கார், வேன் புக்கிங்களுக்கும் கமிசன் கிடைக்கும், அப்படியே புக்கிங் கம்மியானாலும் கூட குறைந்த பட்சம் எப்படியும் ஒரு நாளுக்கு ஒரு 2,500 ரூபாய் ஆவது இலாபம் பார்த்து விடலாம், ஒரு சிறிய டிராவல் ஏஜென்சி வைத்தாலும் கூட நல்ல மெயின் ஆன இடத்தில் வைக்கும் போது புக்கிங் அதிகமாக கிடைக்கும், அதே சமயத்தில் இலாபமும் அதிகமாக கிடைக்கும், மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு 80,000 ரூ முதல் 1,00,00 ரூ வரை சம்பாதிக்க முடியும்.