• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...பேன்ஸி ஸ்டோர்ஸ் வைப்பது எப்படி...?

Fancy Store Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-12 04:27:16  |    988

Fancy Store Business Ideas Tamil - பொதுவாக பேன்ஸி ஸ்டோர்ஸ் என்பது பெண்களை மையமாக வைத்து துவங்கப்படும் ஒரு தொழில், அவர்களுக்கு பிடித்த அனைத்து பொருள்களும் தேடி தேடி பிடித்து கடைகளில் நிரப்பினால், யோசிக்காமல் வாங்கி விட்டு செல்வார்கள், இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் பேன்ஸி பொருள்கள் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 300 முதல் 500 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும்.

சரி, பேன்ஸி கடை எங்கு வைப்பது, எப்படி வைப்பது?

பேன்ஸி கடைகளை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளுக்கு மிக மிக அருகில் வைத்தால், கடைக்குள் எளிதாக கூட்டத்தை நிரப்ப முடியும், இல்லையேல் ஏதேனும் நகரத்திலும், டவுண்களின் மையத்திலும் வைக்கலாம், பொருள்களை கடை முழுக்க அழகாக நிரப்பி வைத்தல் அவசியம், பார்த்தவுடன் கவரும் பொருள்களை அனைவருக்கும் தெரியும் படி காட்சிப்படுத்தி வைப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களை கடைக்கும் வர வைக்கும். பொதுவாக பெண்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்து எடுத்து தேர்ந்து எடுத்து வாங்கி கடையை நிரப்புதல் வேண்டும்.


நீங்கள் தென் மாவட்டங்களில் இருக்கிறீர்கள் என்றால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு ரத வீதியில் பேன்ஸி கடைகளுக்கு என்று மொத்தமாக பேன்ஸி பொருள்களை மொத்த விலையில் விற்கின்ற கடைகளின் வரிசைகள் அங்கு நிரம்பி இருக்கும், அங்கு சென்று உங்கள் கடைகளுக்கு தேவையான விடயங்களை பர்சேஸ் செய்து கொள்ளலாம், ஒரு முறை மொத்தமாக உங்களுக்கு விருப்பமான கடைகளில் பர்சேஸ் செய்து விட்டு, அதற்கு பின்னர் அவர்களின் காண்டாக்ட் எண், வாட்சப் உள்ளிட்டவைகளை வாங்கி விட்டு கால்களின் மூலம் ஆர்டர்கள் மேற்கொள்ளலாம்.

புது புது மாடல்கள் உங்களுக்கு வேண்டும் எனில் இந்தியாமார்ட், ட்ரேட் இந்தியா, ட்ரேட் இன்போ உள்ளிட்ட இணையதளங்களில் பேன்ஸி பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் வட இந்திய நிறுவனங்களின் முகவரி மற்றும் காண்டாக்ட் எண்கள் கிடைக்கும், நீங்கள் அவர்களுடன் பேசி புது புது மாடல்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப சொல்லி, விலை எல்லாம் பேசி லாரி சர்வீஸ் அல்லது கொரியர் சர்வீஸ்கள் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்ப சொன்னால் அனுப்பி விடுவார்கள்.


பேன்ஸி கடைகளின் மூலம் நல்ல இலாபம் இருக்குமா?

முதலில் வாடிக்கையாளர்களை உங்கள் கடைகளுக்குள் வர வைக்க வேண்டும், அதற்கு இரண்டு விடயங்கள் தான் முக்கியம் ஒன்று அலங்காரமான முறையில் காட்சிப் படுத்த கூடிய வகையில் கடை, இன்னொன்று பெண்களுக்கு பிடித்த புது புது மாடலான பேன்ஸி பொருள்கள் இந்த இரண்டையும் நீங்கள் செய்யும் பட்சத்தில், நிச்சயம் கடை வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும். இலாபத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பேன்ஸி பொருள்களுக்கும் 300 முதல் 500 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும்.

 

" குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு நல்ல வருமானம் தருகின்ற சிறிய பேன்ஸி கடைகளின் மூலமாகவே மாதத்திற்கு 50,000 முதல் 75,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும், உங்களது அதீத திறன் பொறுத்து அதை இலட்சங்களாக கூட மாற்ற முடியும் "