Murukku Adhirasam Shop Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் முறுக்கு மற்றும் அதிரசம் கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Murukku Adhirasam Shop Ideas Tamil - பொதுவாக கிராமங்களில் என்ன ஒரு விழாவோ, வைபவமோ என்றாலும் கூட அனைவரின் வீட்டிற்கும் முறுக்கு அதிரசம் கொடுப்பது வழக்கம், இது போக பண்டிகை காலங்களில் முன்பு போல யாரும் வீட்டில் அதிரசம் முறுக்கு எல்லாம் சுடும் பழக்கம் மாறி விட்டது, அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இதனால் கடைகளில் ஒரு 100 போல வாங்கி பண்டிகையை கொண்டாடி விடுகின்றனர்.
பெரிதாக முதலீடு ஏதும் தேவைப்படாது, அடுப்பு, நல்ல அகன்ற இரும்பு வாணலி, இரும்பு கரண்டி என மொத்தமாக அனைத்து உருப்படிகளையும் சேர்த்தாலும் கூட மொத்த பட்ஜெட்டே ஒரு பத்தாயிரத்திற்குள் தான் வரும், நல்ல கனமான கரண்டிகள், இரும்பு வாணலிகள் வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது, பாமாயில்களை பயன்படுத்தாமல் தரமான சன்பிளவர் ஆயில்களை முறுக்கு சுட பயன்படுத்தலாம்.
தற்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்களது ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடைகளுக்கு அவர்களும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், பொதுவாக பெரும்பாலான கிராமங்களில் முறுக்கு கடைகள் பெண்கள் தான் வைத்து இருக்கிறார்கள், கை சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம் பெரும்பாலும் இந்த மூன்றும் தான் சுட சுட சுட்டு கடைகளில் விற்கிறார்கள்.
ஒரு முறுக்கிற்கும், அதிரசத்திற்கும் கிட்டதட்ட 1.5 முதல் 2 ரூபாய் வரை இலாபம் வைத்து விற்கிறார்கள், சிறிய சிறிய வைபவங்களுக்கே கிட்டதட்ட 500 முதல் 1000 முறுக்கு அதிரசம் வாங்குவார்கள், இது போக சில்லறை விற்பனையும் நடக்கும், எப்படிப்பார்த்தாலும் சராசரியாக மாதம் ரூ 30,000 உத்தரவாதத்துடன் கைகளில் நிற்கும், பொதுவாக நகரங்களை விட கிராமங்களில் இந்த முறுக்கு அதிரச கடைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.