• India
```

மாதம் ரூ 35000 வரை வருமானம்...அசத்தல் இலாபம் தரும் பழைய புத்தக கடை...!

Old Book Shop Ideas In Tamil

By Ramesh

Published on:  2024-11-19 01:22:13  |    398

Old Book Shop Ideas In Tamil - நல்ல இலாபம் தரும் பழைய புத்தக கடை குறித்தும், பழைய புத்தக கடை எப்படி வைப்பது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Old Book Shop Ideas In Tamil - பொதுவாக எதற்காக பழைய புத்தக கடை என்பது குறித்து முதலில் பார்க்கலாம், பொதுவாகவே பள்ளி கல்லூரி மாணவர்களோ, போட்டி தேர்வர்களோ படிப்பதற்கு ஒரு சில புத்தகங்களை மிகுந்த விலை கொடுத்து வாங்க வேண்டி வரும், ஆனால் அந்த சமயங்களில் கைகளில் குறைந்த பணம்தான் இருக்கும், அந்த வகையில் தான் அவர்கள் மெட்டீரியல்களை பழைய புத்தக கடைகளுக்கு தேடி செல்வார்கள்.

பொதுவாக பழைய புத்தக கடை என்பது யாரோ ஒருவர் பயன்படுத்திய புத்தகங்களை மலிவான விலைக்கு மீண்டும் விற்பனைக்கு உட்படுத்தும் ஒரு தொழில் ஆகும், இதற்கு பெரிதாக முதலீடுகள் ஏதும் தேவை இல்லை, ஒரு எலக்ட்ரானிக் தராசு, பழைய புத்தகங்களை வாங்கும் ஒரு தனி இடம், அதனோடு ஒட்டி பழைய புத்தகங்களை காட்சிப்படுத்தும் ஒரு நூலகம் போன்ற அமைப்பு.



இவ்வளவு மட்டும் இருந்தாலே போதும் ஒரு பழைய புத்தக கடை ஆரம்பித்து விடலாம், பொதுவாக புத்தகங்கள் கிலோ 15 ரூபாய் வரை பழைய புத்தக கடைகளில் எடுக்கிறார்கள், மாணவர்களிடம் ரூ 30 வரை எடுப்பார்கள், காரணம் அவர்களிடம் ஏதாவது பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கலாம் என்ற வகையில், குடும்பஸ்தர்களோ, வேறு யாரோ வருமாயின் கிலோ 15 ரூபாய் தான்.

இது தான் பழைய புத்தக கடையின் நுணுக்கம், பொதுவாக ஒரு புத்தகம் அதன் விலையில் 1000 ரூபாய் இருக்குமானால், பழைய புத்தக கடையில் ரூ 250 முதல் 300 ரூபாய்க்கு கொடுப்பார்கள், கரண்ட் எடிசனாக இருந்தால் பாதி விலைக்கு கூட கொடுப்பார்கள், பள்ளி புத்தகங்கள் போட்டி தேர்வுகளுக்கு முக்கியம் என்பதால் அது செட் ஆக 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

" தேவையுள்ள புத்தகங்களை தனியாக தெரிந்தெடுப்பது மட்டும் தான் பழைய புத்தக கடையில் உங்களது வேலையாக இருக்கும், மற்றபடி நாள் ஒன்றுக்கு ஒரு 5 முதல் 10 புத்தகங்கள் விற்றால் கூட மாதம் ரூ 25,000 முதல் 35,000 வரை வருமானம் ஈட்ட முடியும் "