சரி, சலூன் எப்படி ஆரம்பிக்கலாம்?
முதலில் ஒரு கடையை பார்க்க வேண்டும். சிறிய கடையாக இருந்தாலும் நன்று தான், முதலாவதாக கடைக்கான வாடகை உரிமம், கடை வைப்பதற்கான மாநகராட்சி, பேரூராட்சி ஆவணங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ட்ரிம்மர், கத்திரிக்கோல் உள்ளிட்டவைகளை நல்ல பிராண்டடுகளில் வாங்கி வைத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. லோக்கல் கடைகளில் வாங்கும் போது அது தோலை கிழிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
குறைந்த பட்சம் ஷேவிங் க்ரீம், ட்ரிம்மர்கள், அழகு சாதன பொருட்கள், கண்ணாடிகள், சேர்கள் ஆகியவற்றிற்கு 15,000 வரை செலவு ஆகும். முதல் முறை மட்டும் செலவு அதிகம். அதற்கு பின்னராக போக போக பொருட்கள் மட்டும் வாங்கி போட்டால் போதுமானது ஆக இருக்கும். முக்கியமாக கிருமி நாசினிகள் வைத்துக் கொள்ள வேண்டும். பிளேடுகள் ஏதும் படும் போது டூல்களை கிருமி நாசினி கொண்டு க்ளீன் செய்வது அவசியம்.
சரி, ஒரு வேளை சலூன் துறையில் பெரிதாக அனுபவம் இல்லை என்றால்?
தற்போதெல்லாம் சலூன்களுக்கு என்று செய்முறை கோர்ஸ்கள் எல்லாம் இருக்கிறது. 2 மாதம், 6 மாதம் வரையில் கூட செய்முறையாக படிக்கலாம். கூடவே அழகியல் குறித்தும் சொல்லி தருகிறார்கள். அங்கு கற்றுக் கொண்டு கூட சலூன் ஆரம்பிக்கலாம், தொழிலில் முதலில் கற்றுக் கொள்ளுதல் என்பது அவசியம், அதற்கு பின் அனுபவம் என்பது ஆட்டோமேட்டிக்காகவே வந்து விடும்.
சரி, சலூன் மூலம் தினசரி எவ்வளவு சம்பாதிக்கலாம்?
பொதுவாக கிராமப்புறங்களில், கட்டிங் மற்றும் சேவிங்கிற்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வாங்குகிறார்கள், தினமும் 10 பேருக்கு கட்டிங் & சேவிங் பண்ணினால் கூட 1500 முதல் 2000 வரை சம்பாதிக்கலாம். நகர்புறங்களில் கட்டிங் மற்றும் சேவிங்கிற்கு 200 முதல் 250 வரை வாங்குகிறார்கள். தினமும் 10 வாடிக்கையாளர்கள் வந்தால் கூட 2000 முதல் 2500 ரூபாய் வரை சம்பாதிக்க இயலும், மற்ற தொழிலை போல தினசரி முதல் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால் தினசரி இலாபங்கள் அப்படியே நிற்கும்