Photo Studio Ideas Tamil - என்ன தான் குவாலிட்டியான மொபைல் கேமராக்கள் அனைவரின் கைகளில் வந்தாலும் கூட, ஏதாவது வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்வு வரும் போது அதை நல்லதொரு நினைவாக மாற்றுவதற்கு ஆல்பங்கள் மிகவும் அவசியம் என மக்கள் நினைக்கின்றனர், அதனால் தான் டெக்னாலஜிகள் எவ்வளவோ முன்னேறினாலும் கூட இன்னமும் ஸ்டுடியோக்களுக்கு மவுசு இருக்கிறது.
அன்று கேமரா, பிலிம் இருந்தவைகள் இன்று ட்ரோன்கள், மெமோரி கார்டுகளாக மாறி இருக்கின்றன, மற்றபடி ஸ்டுடியோக்களில் பெரிதாக ஏதும் மாற்றம் இல்லை, ஸ்டூடியோக்களை பொறுத்தவரை முதலில் ஒரு நல்ல செட்டப்களுடன் ஒரு அறை, நல்ல பிராசசர் மிகுந்த ஒரு கம்ப்யூட்டர், ஒரு ப்ரிண்டர், ஒரு நல்ல கேமரா, பின்னர் வீடியோ எடுப்பதற்கான லைட்டிங் டூல்கள் இவ்வளவு போதுமானதாக இருக்கும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்யாண நிகழ்வுகள், ஈகாமர்ஸ்களுக்காக பிராடக்டுகளை படம் பிடித்தல் மற்றும் ஏனைய பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்காக பயனர்கள் ஸ்டுடியோவை அணுகுவது உண்டு, பொதுவாக 8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவிற்கு ரூ 80 முதல் 100 ரூபாய் வாங்குகிறார்கள், ஆனால் அதில் செலவு என்பது வெறும் ரூ 15 முதல் 20 ரூபாய் தான்.
ஒரு நாளைக்கு 15 பேர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வந்தால் கூட அதன் மூலம் ஆகவே தினசர் ரூ 1200 வருமானம் கிட்டும், இது போக பிரம்மாண்டமாக வைபவங்களுக்கு படம் பிடிப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் இலட்சங்கள் வரை வாங்குகிறார்கள், சிறிய சிறிய நிகழ்ச்சிகளுக்கு ரூ 30,000 முதல் 40,000 வரை வசூலிக்கிறார்கள், எப்படி பார்த்தாலும் மாதம் இலட்சங்களில் வருமானம் தான்.
" உங்களிடம் நல்ல போட்டோகிராபி திறமை இருக்கும் பட்சத்தில், ஸ்டுடியோவிற்கு நல்ல இடமும் அமையும் பட்சத்தில் ஸ்டுடியோ முதலீட்டில் நல்ல இலாபம் பார்க்கலாம் "