• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...சூப்பர் மார்க்கெட் வைப்பது எப்படி?

 Super Market Business | Own Business in Tamil​

By Ramesh

Published on:  2024-10-09 06:04:43  |    526

Super Market Business​-சூப்பர் மார்க்கெட் என்பது அனைவரும் விரும்பி வைக்க ஆசைப்படும் ஒரு தொழில், ஆனால் பலரும் அதில் இருந்து பின் வாங்கி விடுகிறார்கள். இப்போது இந்த தொகுப்பில் எப்படி யோசனையில் இருந்து பின் வாங்காமல், நல்ல இலாபமும் தரும் வகையில் ஒரு சூப்பர் மார்க்கெட் வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

 Super Market Business-நீண்ட நெடிய இடமாக முதலில் அமைய வேண்டும், ஏதாவது டவுணுக்கு நடுவில் ஷாப் அமைவது அவசியம், பார்க்கிங் வசதி நிச்சயமாக இருக்க வேண்டும், முக்கியமாக முதலீடு அதிகம் இருக்க வேண்டும், துவங்குவதற்கு முன்பாகவே ஆட்களை பணியமர்த்துவது, ஸ்டாக்குகள் ஏத்துவது என அனைத்து வேலைகளையும் முடித்து வைத்தல் வேண்டும், வாடிக்கையாளர்கள் பொருட்களை தேடி எடுக்காதவாறு அனைத்தும் வகைப்படுத்தி அடுக்கப்படல் வேண்டும், 


ஒரு வீட்டிற்கு தேவையான அத்துனையும் அங்கு இருக்க வேண்டும், ஏதாவது ஒரு பொருளுக்காக வாடிக்கையாளர்கல் வெளியில் சென்று வாங்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது, உதாரணத்திற்கு உங்கள் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டிற்கு தினம் தினம் தேவைப்படும் அத்துனை அத்தியாவசியங்களும் அங்கு இருக்க வேண்டும், மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் அடியெடுத்து வைக்க இரண்டே இரண்டு காரணங்கள் தான்.

ஒரு காரணம் பில் எழுதாமல் நேரடியாக பார்த்து தேவையானதை தரமானதை கொள்முதல் செய்ய முடியும், இன்னொரு காரணம் விலை, இந்த இரண்டையும் திருப்தி படுத்தும் வகையில் உங்களுடைய சூப்பர் மார்க்கெட் இருக்க வேண்டும், பொருட்களை கொள்முதல் செய்யும் போது நேரடியாக கம்பெனிகளை அணுகி பெறுதல் அவசியம், சந்தைகளை விட உங்கள் மார்ட்டில் விலை குறைவாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் உங்கள் மார்க்கெட்டை தேடி வருவார்கள்.

சரி, இலாபம் எப்படி பார்ப்பது?

சூப்பர் மார்க்கெட்டை பொறுத்தவரை மக்கள் தினமும் உபயோகிக்கும் அத்தியாவசியங்களை விலை உயர்த்தி விற்க முடியாது, நீங்கள் அத்தியாவசியங்களில் எவ்வளவு விலை குறைத்து விற்கிறீர்களோ அதைப் பொறுத்து தான் வாடிக்கையாளர்கள் உங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் அதிகம் வருவார்கள், அத்தியாவசியங்கள் என்றால் ஒரு 10 பொருள்கள் தான், அந்த பொருள்களில் நீங்கள் இலாபத்தை துறந்து தான் ஆக வேண்டும், உங்கள் கடைக்குள் அதை தவிர்த்து ஆயிரம் ஏனைய பொருள்களும் இருக்கும், அந்த ஏனைய பொருள்களில் நீங்கள் பார்ப்பது தான் இலாபம். இது தான் சூப்பர் மார்க்கெட் இலாபத்தின் சூத்திரம்.