சரி, அது ஏன் இட்லி, தோசை மட்டும் என்றால்...!
சரி, அது ஏன் இட்லி, தோசை மட்டும் என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது, ஒரு பிரியாணியையோ, ஒரு சைவ சாப்பாடையோ, ஒரு பரோட்டாவையோ எடுத்துக் கொண்டால் அதன் ஆக்க செலவு என்பது கொஞ்சம் அதிகம், ஒரு குறிபிட்ட விலைக்கு விற்கும் போது, அசலே, குறித்த விலையில் 70 சதவிகிதம் வந்து விடும், 30 சதவிகிதம் தான் இலாபம் என்பது இருக்கும். ஆனால் இட்லி தோசைகளில் அப்படி இல்லை. அதன் ஆக்க செலவு என்பது மற்ற உணவுகளை விட மிக மிக கம்மி, அதனால் விற்பனையாளர்களுக்கு மற்ற உணவுகளை விட இட்லி, தோசை அதிகம் இலாபம் தருகிறது.
சரி, ஒரு குத்து மதிப்பாக இட்லி, தோசை என்பது எவ்வளவு இலாபம் தரும்?
பொதுவாக மாவுக்கடைகளில் மாவு விற்பார்களே, அந்த கப் அளவிற்கான மாவை ரியாலிட்டியில், தயாரிப்பதற்கு ஒரு இருபத்து ஐந்து முதல் 30 ரூபாய் வரை செலவு ஆகிறது, அந்த 30 ரூபாய் மாவில், குறைந்த பட்சம் 25 இட்லிகள் வரை அவிக்க முடியும், அதற்கான சாம்பார், சட்னிகளுக்கு
ஒரு இட்லிக்கு ஊத்துகிற அதே மாவை தான் கடைகளில் தோசையாகவும் ஊத்துவர், ஆனால் சாதா தோசையே தற்போது 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பீஸ் என்று எடுத்துப்பார்க்கும் போது இட்லியை விட தோசையே அதிகம் இலாபம் தருவது போன்று தோன்றும், ஆனால் ஒரு தொழிலாக பார்க்கும் போது தோசையை விட அதிக இலாபம் தருவது இட்லி தான், காரணம் சாப்பிட வருவர்கள் தோசை என்றால் இரண்டோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் இட்லி என்றால் அப்படி இல்லை குறைந்தபட்சம் 5, அதிக பட்சம் 8,10 வரை செல்வார்கள்.
இட்லி, தோசை என்பது பல ஹோட்டல்களின் இலாபத்திற்கான முகாந்திரம், வெறும் விலையை 8 ரூபாய் நிர்ணயிக்கும் போதே இட்லி தோசைகள் இவ்வளவு இலாபம் தருகி