How To Earn By Selling PDF Materials - உங்களிடம் போட்டி தேர்வுகளுக்கான PDF மெட்டீரியல்கள், E மெட்டீரியல்கள் இருப்பின் அதன் மூலம் மாதம் ரூபாய் முப்பதாயிரத்திற்கும் குறையாமல் சம்பாதிக்க முடியும், எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Earn By Selling PDF Materials - பொதுவாக அனைவருமே
ஏதாவது ஒரு கட்டத்தில் போட்டி தேர்வுகளுக்காக நோட்ஸ்கள் வாங்கி படித்து இருப்போம்,
நோட்ஸ்கள் எடுத்து படித்து இருப்போம். ஆனால் பல நாட்களுக்கு பிறகு அந்த நோட்ஸ் அப்படியே
வீட்டிலேயே தங்கி இருக்கும், யாருக்கும் உதவாத வகையில் வீட்டிலேயேவும் இருக்கும். பல
நாட்கள் உட்கார்ந்து படித்து நீங்கள் எடுத்த அந்த நோட்ஸ்களின் மதிப்பு என்பது விலை
மதிப்பற்றது, அதை இன்னொருவருக்கு உதவும் வகையில் ஈ மெட்டீரியலாக மாற்றுவதன்
மூலம் ஒரு குறிப்பிடத்தக்க இலாபம் பார்க்க முடியும்.
செல்போன், லேப்டாப், இணையம் என்று வந்து விட்ட பிறகு இங்கு புத்தகமாக மெட்டீரியலை வாங்கி படிப்பவர்கள் மிக மிக கம்மி ஆகி விட்டார்கள், அதனால் ஈ மெட்டீரியலுக்கு டிமாண்ட் எப்போதுமே அதிகம், உங்களிடம் இருக்கும் ஈ மெட்டீரியலை நீங்கள் பணமாக்க விரும்பினால் ஒரு ஈ காமெர்ஸ் வெப்சைட் துவங்கி அதன் மூலம் உங்களது மெட்டீரியல்களை சந்தைப்படுத்தலாம், இன்னும் எளிதான வழி என்றால் பேஸ்புக் பேஜ்கள் மூலம் உங்கள் மெட்டீரியல்களை விளம்பரத்தி சந்தைப் படுத்தலாம்.
TNPSC, TNUSRB, SSC, UPSC என்று
இந்தியாவில் பல முக்கியமான தேர்வுகளுக்கு
கோடிக்கணக்கில் போட்டியாளர்கள் தினமும் ஆன்லைனில் மெட்டீரியல்களை தேடிக் கொண்டு இருக்கின்றனர். உங்களால் சிறந்த ஈ மெட்டீரியல்களை உருவாக்கி
சந்தைப் படுத்த முடிந்தால் வீட்டில் இருந்து கொண்டே தினசரி ரூபாய் 1500 முதல் 2000 வரை சம்பாதிக்க இயலும், இதில் முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது உங்களுக்கு மெட்டீரீயல்களை சிறந்த முறையில் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
சரி எப்படி
மெட்டீரியல்களை
சந்தைப்படுத்துவது?
1) முதல் அந்த PDF புத்தகங்களை அல்லது நோட்ஸ்களை ஏதாவது பேமெண்ட் கேட்வேக்களுடன் இணைத்து லிங்க் வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) பின்னர் அந்த லிங்கை ஈ கமெர்ஸ் வெப்சைட்டுகள், பேஸ்புக் விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள், டெலிகிராம் குரூப்கள் என அனைத்திலும் பதிவிட்டு விளம்பரப்படுத்த வேண்டும்.
3) உங்களது மொபைல் நம்பரும் கொடுக்கப்படும் பட்சத்தில் ஒரு சிலர் மெட்டீரியல் பற்றி கேட்டு நம்பகத் தன்மையுடன் வாங்குவதற்கு அது இலகுவாக இருக்கும்.
4) அதிகபட்ச விலை நிர்ணயிக்காமல் அனைவருக்கும் எளிதாகப் படுகின்ற தொகையை நிர்ணயித்தால் அதிக விற்பனைக்கு அது வழி வகுக்கும்
" வீட்டில் சும்மா கிடக்கும் மெட்டீரியல்களை இதன் மூலம் அனைவரும் பயன்படும் வகையிலும் செய்ய முடியும், அதே சமயத்தில் உங்களுக்கும் அந்த மெட்டீரியல்களால் ஒரு குறிப்பிடத்தக்க வருமானமும் கிட்டும் "