Photo Frame Works Business Plan - போட்டோ பிரேம் என்பது ஒரு சிலர் ஒரு சில நினைவுகளை ப்ரேம் செய்து வீட்டில் மாட்டி வைக்க வேண்டும் என நினைப்பார்கள், திருமண நினைவுகளோ, பிறந்தநாள் நினைவுகளோ இல்லை மற்றும் ஏதும் மறக்க முடியாத நினைவுகளோ அது எப்போதும் வீட்டில் ப்ரேம்களாக தொங்கிக் கொண்டு இருந்தால் எப்போதும் அந்த நினைவுகள் நிஜங்களை போலவே மனதை வருடிக் கொண்டு இருக்கும்.
பலரும் கிப்ட்களுக்காகவும், நினைவுகளுக்காகவும், புது வீடுகளில் சுவர்களில் மாட்டுவதற்கு அழகழகான புகைப்படங்களையும் பிரேம்களாக்க நினைக்கின்றனர், அது தான் தற்போதெல்லாம் மொபைல் கலாச்சாரம் ஆகிட்டே என்றால் பிரேம்களுக்கும் இன்னும் மதிப்பு இருக்க தான் செய்கிறது, ஒரு சில முக்கிய புகைப்படங்களை மொபைலில் வைப்பதை விட சுவர்களில் மாட்டவே பயனர்கள் விரும்புகின்றனர்.
டிஜிட்டல் பிரிண்டர், ஒரு கம்ப்யூட்டர், பிரேம்களை அழகாக அடுக்கி வைக்க ஒரு காட்சி படலம் இவ்வளவு போதும் ஒரு போட்டோ பிரேம் கடைக்கு, குறைந்த பட்சம் முதலீடுகள் என்னும் போது 2 இலட்சம் முதம் 3 இலட்சம் வரை ஆகலாம், வங்கிகளில் முத்ரா லோன் பிரிவில் கடனாக பெற்றும் கூட தொழிலை துவங்கலாம், கஸ்டம்டு பிரேம்கள் போக Quotes, கிரிக்கெட் வீரர்கள், இயற்கை காட்சிகள் போன்ற பிரேம்களையும் விற்பனைக்கு வைக்கலாம்.
பொதுவாக ஒரு பிரேமிற்கு ரூ 200 முதல் ரூ 1000 வரை பிரேமின் அளவை பொருத்து வசூலிக்கிறார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 2 முதல் 5 பிரேம்கள் ஆர்டர் வந்தால் கூட தினசரி ரூ 1000 முதல் 2000 வரை இலாபம் பார்க்க முடியும், மாதம் என்று கணக்கிட்டால் நிச்சயம் ரூ 30,000 முதல் 45,000 வரை இத்தொழிலில் நிச்சயம் இலாபம் ஈட்ட முடியும், உங்களுக்கு தொழில் பழக்கம் இல்லை என்றால் கூட ஒரு வாரத்தில் இத்தொழிலை கற்றுக் கொண்டு செய்யலாம்.
" பிரேம்களின் மாடல்கள், சரியான நேரத்தில் டெலிவரி, உங்களுடைய பெஸ்ட் அவுட்புட் என இந்த மூன்று காரணிகள் உங்கள் தொழிலை இன்னும் மேம்படுத்தும், இது போக ஒரு சில போட்டோ ஸ்டுடியோக்களுடன் இணக்கத்துடன் இருப்பின் ஆர்டர்கள் நிறைய வரும் , நிறுவனத்தையும் வருமானத்தையும் அதிகப்படுத்த அது தூண்டுகோலாக அமையும் "