• India
```

200 ரூபாயில் அடியெடுத்து வைத்த மாணவன்..ரூ.10 கோடி மதிப்பில் வளர்ந்த Naked Nature!

Naked Nature Products | Young Entrepreneurs in Tamilnadu

By Dharani S

Published on:  2024-09-30 12:53:08  |    543

மதுரையின் துரையை சேர்ந்த 22 வயது மாணவன் சூர்ய வர்ஷன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கி, இன்று ரூ. 10 கோடி மதிப்புள்ள Naked Nature என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

சூர்யா, 12வது வகுப்பில் படிக்கும் போது தனது வீட்டு சமையலறையில் செம்பருத்தி பயன்படுத்தி குளியல் உப்பை தயாரிக்க ஆரம்பித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர், அங்கு இருந்து அவருக்கு தேவையான உப்பை வரவழைத்தார்.பிறகு, ஆரம்பத்தில், அவரது தயாரிப்புக்கு எவரும் பெரிதாக மதிப்பளிக்கவில்லை, அவருடைய சிறு வயதை காரணமாக வைத்து பலரும் நிராகரித்து வந்தனர்.




ஆனால், ஒரு ஆயுர்வேத மருத்துவர் தயாரித்துள்ள உப்பை ஆர்வத்துடன் வாங்கி வந்தனர். இதனால் சூர்யாவின் தொழிலுக்கு புதிய திருப்புமுனை அமைந்தது. இதனையடுத்து, மதுரையில் உள்ள கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பட்ட படிப்பைப் படித்த சூர்யா, தனது சொந்த வருமானத்தை வைத்து நிறுவனம் உருவாக்குவதற்கு முதலீடு செய்தார். தற்போது, Naked Nature 70 வகை தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

2021 மற்றும் 2022-ல், நிறுவனம் ரூ. 56 லட்சம் விற்பனை செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.மேலும் தற்போது தமிழகம் தவிர,பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமாகியுள்ளது.


ஒரு வெறும் 200 ரூபாயில் துவங்கிய இந்த பயணம், இன்று 10 கோடி மதிப்பில் வளர்ந்துள்ளது.