Apple Fruit Price 1kg-பொதுவாகவே நாம் கடைகளுக்கு சென்று ஜெனரலாக வாங்கும் பழங்களில், தங்கம் விலைக்கு இருப்பது என்பது ஆப்பிள் என பொதுவாக சொல்வார்கள், அதனால் தான் ஆப்பிளை பலரும் பழங்களில் தங்கம் என கூறுவார்கள், பொதுவாக தமிழக மார்க்கெட்டுகளில் ஆப்பிள்கள் ஒரு கிலோ என்பது 200 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுவதை பார்த்து இருப்போம், ஆனால் ஒரு கிலோ ஆப்பிள் என்பது 25 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், நம்பி தான் ஆக வேண்டும், ஒரு கிலோ ஆப்பிள் 25 ரூபாய் தான், காஷ்மீரில் இன்று அனந்த்நாக் என்ற மாவட்டத்தில் இருக்கும் குல்கம் மார்க்கெட்டில் ஒரு கிலோ ஆப்பிளின் இன்றைய விலை 25 ரூபாய் மற்றும் 20 பைசா தான், ஒரு குவிண்டால் அதாவது 100 கிலோ ஆப்பிள் 2,520 ரூபாய்க்கு குல்கம் மார்க்கெட்டில் விற்கப்படுகிறதாம், இன்னும் சில மார்க்கெட்டுகளில் இதை விட குறைவாகவும் கிடைக்குமாம்.
சரி, ஆப்பிள் எப்படி இவ்வளவு குறைவாக?
பொதுவாகவே ஒரு பொருள் விலையும் இடத்தில் விலை குறைவாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் காஷ்மீர் ஆப்பிள்களின் தலை நகரம் என்றே சொல்லலாம், அங்கு ஒரு கிலோ ஆப்பிள் என்பது 25 ரூபாய் என்பது சர்வ சாதாரணம் என சொல்கின்றனர் விற்பனையாளர்கள், இதை விட கம்மியான விலைக்கும் இந்த வருடத்தில் விற்று இருக்கிறோம் என்கின்றனர் குல்கம் சந்தையாளர்கள்.
சரி, அப்படி என்றால் நம் மாநிலத்தில் ஏன் இவ்வளவு அதிகம்?
பொதுவாக தமிழகத்தில் இருந்து காஷ்மீரின் தொலைவு என்பது கிட்டதட்ட 3,500 கி.மீட்டருக்கும் அதிகம், பொதுவாக ஆப்பிள் என்பது சூழல் மாறியதும் உடனடியாக கெட்டு போக கூடிய ஒரு பழ வகையை சார்ந்தது, காஷ்மீரிலேயே இருக்கும் பட்சத்தில் ஆப்பிள் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்குமாம், ஆனால் அதை அதன் சூழலில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் போது அதை கெட்டு போகாமல் பாதுகாக்க பல அடிப்படையான சூழல் மற்றும் ப்ரீசர்ஸ் வசதி உள்ளிட்டவைகள் எல்லாம் தேவைப்படுகிறது. பல மாநிலங்களை கடந்து வரும் போது அதன் மீது விதிக்கப்படும் பலதரப்பட்ட வரிகள், ஆப்பிளை பாதுகாக்க அமைக்கப்படும் ப்ரீசர்ஸ் வசதிகள் இதன் காரணமாக தான் காஷ்மீரில் 25 ரூபாய் இருக்கும் ஆப்பிள் இங்கு வரும் போது 250 ரூபாய் ஆக காரணம் என கூறப்படுகிறது