Tomato Wholesale Business Ideas Tamil - மொத்த தக்காளி கடை வைத்து எப்படி நல்ல இலாபம் பார்க்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tomato Wholesale Business Ideas Tamil - தக்காளி உற்பத்தியில் தமிழகம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது, இந்தியாவின் ஒட்டு மொத்த தக்காளி உற்பத்தியில் கிட்டதட்ட 7 சதவிகிதத்தை தமிழகம் உள்ளடக்கி இருக்கிறது, தமிழகத்தில் பொதுவாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்பட்டு பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொதுவாக தக்காளிகள் மொத்தமாக இரண்டு மார்க்கெட்டுகளுக்கு வந்து பிற மாவட்ட சந்தைகளுக்கு செல்கின்றன, ஒன்று கோயம்பேடு மார்க்கெட், இன்னொன்று மதுரை காய்கனி மார்க்கெட், தமிழகத்தின் பெரும்பால பகுதிகளுக்கு இந்த இரண்டு இடங்களில் இருந்து தக்காளி விநியோகம் ஆகிறது, உங்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வேண்டும் எனில் நேரடியாக உற்பத்தி மையத்திற்கே செல்ல வேண்டும்.
முதலீடுகளை பொறுத்தவரை ஒரு 50,000 ரூபாய் கையில் இருக்க வேண்டும், தக்காளி பெட்டிகள் ஒரு 50 எண்ணம் வாங்கி கொள்ள வேண்டும், தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்ய ஒரு வண்டி இருந்தாலும் நன்று, பொதுவாக நீங்கள் நேரடி கொள்முதலில் ஈடுபடும் போது ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு பெற முடியும், இடைத்தரகர்கள் என்றால் கிலோ ரூ 30 வரை விலை நிர்ணயம் செய்வார்கள்.
சந்தைகளில் தற்போது தக்காளி ரூ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது, விற்பனையாளர்களுக்கு ரூ 35 முதல் 40 வரை விலை நிர்ணயம் செய்யலாம், வீட்டிற்காக வந்து வாங்குபவர்களுக்கு ரூ 40 முதல் 45 வரை விலை நிர்ணயம் செய்யலாம், நாள் ஒன்றுக்கு நீங்கள் ஒரு 10 தக்காளி பெட்டி விற்றால் கூட, ரூ 1,500 வரை தனியாக இலாபம் மட்டும் பார்க்க முடியும், 30 பெட்டி வரை விற்கும் விற்பனையாளர்களும் இருக்கிறார்கள், விற்கும் திறன் உங்களை பொறுத்தது.