Pickle Business Ideas Tamil - ஊறுகாய் என்பது ஒரு மிகச்சிறந்த, எளிய, பெண்களுக்கும் உகந்த ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது, பொதுவாக சந்தைகளில் நன்கு விற்பனையாகும் ஊறுகாய் வகைகள் எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய், வத்தகுழம்பு, மிக்ஸடு ஊறுகாய், வெல்லப்பூண்டு ஊறுகாய், இவைகள் தான் பொதுவாக அதிகமாக மக்களால் சந்தைகளில் வாங்கப்படும் ஊறுகாய் வகைகளாக பார்க்கப்படுகிறது.
எலுமிச்சை, நார்த்தை இவைகளை எல்லாம் சந்தைகளில் வாங்காமல் நேரடியாக தோட்ட தொழிலாளர்களிடம் மொத்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம், சந்தைகளில் விற்கப்படும் விலையை விட தோட்ட தொழிலாளர்களிடம் விலை குறைவாக இருக்கும், மீன் ஊறுகாயும் செய்யப் போகிறீர்கள் என்றால் மீன்களை நேரடியாக துறைமுக மீன் விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.
இறால், நெத்திலி, மத்தி உள்ளிட்ட மீன் வகைகள் ஊறுகாய் செய்மானத்திற்கு சிறந்த மீன் வகைகளாக பார்க்கப்படுகிறது, பொதுவாக ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்காகவும் சோடியம் பென்சோயேட் ஊறுகாய் வகைகளில் சேர்க்கப்படுகிறது, அது உடலுக்கு மிகவும் கெடுதல் செய்யக் கூடிய கெமிக்கல் வகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகை கெமிக்கல்களை தவிர்த்து விட்டு Expiry Date யை குறைத்து பண்டகம் செய்யலாம், 200 கிராம், 2 ரூபாய் பாக்கெட்டுகள், 5 ரூபாய் பாக்கெட்டுகள், கல்யாண வைபங்களுக்கு 5 கிலோ டப்பாக்கள் என வகை வகையாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும், 5 கிலோ டப்பாக்களை பொறுத்தமட்டில் எலுமிச்சை, நார்த்தங்காய், மாங்காய் மட்டும் போட்டு வைத்துக் கொள்வது நல்லது.
முதலீடு என்பது ஊறுகாய்க்கான பாட்டில்கள், லேபல்கள், பலசரக்கு பொருள்கள், ஊறுகாய்க்கு தேவையான பண்டகங்கள் அவ்வளவு தான், வீட்டில் இருந்தே கூட தயாரிப்புகளை கடை கடையாக சென்று கொடுக்கலாம், முதன்மை முதலீடு என்பது ஒரு 50,000 ரூபாய் வரை செய்ய வேண்டி இருக்கும், இலாபம் என்பதை பொறுத்தவரை 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை இருக்கும்.
" உதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கான உங்களது முதலீடு ரூ 50,000 எனில், அந்த 50,000 க்கும் உரிய சரக்குகளை அந்த ஒரு மாதத்திற்குள் விற்று தீர்க்கிறீர்கள் என்றால், அந்த மாதத்தில் உங்கள் கைகளில் சேரும் வருமானம் ரூ 70,000 முதல் 75,000 வரை இருக்கும், அதில் இலாபம் மட்டும் தனியாக ரூ 25,000 வரை கையில் நிற்கும் "