இங்கிலாந்தில் பழம் சாப்பிட்டதன் காரணமாக , இஸ்ரேலில் மரக்கன்றுகள் வாங்கி: கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர்
மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு இளைஞர், அவகாடோ பழ வகைகளை விளைவித்து , வருடத்திற்கு ரூ.1 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.
கோடீஸ்வர இளைஞர்
எப்படி அது சாத்தியமானது?
போபப்லி பிறந்த இடமாக கொண்ட ஹர்ஷித் கோதா, பள்ளி காலத்திற்கு பிறகு வணிகத்தைப் படிக்க இங்கிலாந்து சென்றுள்ளார் . விவசாயத்தில் அவர் நுழைவார் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை.
இந்த விஷயத்தைப் பற்றி ஹர்ஷித் கூறுகையில் , "அவகாடோ பழ வகைகள் எங்களுக்கு மிக எளிதாக கிடைக்கும் மற்றும் சத்து நிறைந்துள்ளதாகும் . எனக்கு அவற்றை மிகவும் பிடிக்கும். இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் அந்த பழத்தைத்தான் சாப்பிட்டேன். ஒருநாள் அவகாடோ பெட்டியில் 'இஸ்ரேல்' என்ற உலோகச்சின்னத்தை பார்த்தேன். அதற்குப் பிறகு, இஸ்ரேல் போன்ற வறண்ட இடம், அவகாடோ பழங்களை எப்படி விளைவிக்கிறார்கள் என்று யோசித்து ஆராய்ச்சி செய்ய நினைத்தேன்..
இஸ்ரேலில், வானிலைக்கு ஏற்ப உரங்கள் மற்றும் நீரை பயன்படுத்தியும் பழங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளதை கண்டுபிடித்துள்ளேன். அதே வகையில், இந்தியாவிலும் இதேமுறைபோல் ஒன்றை பயன்படுத்த விரும்புகிறேன் " என்றார்.