Banana Leaf Business - நல்ல இலாபம் தரும் வகையில் வாழை இலை ஏலக்கமிஷன் மண்டி எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Banana Leaf Business - வாழை இலை ஏலக்கமிஷன் மண்டி, பொதுவாக வாழை விவசாயிகள் வெட்டிய இலையை அந்த கிராமத்திற்குள்ளேயே சந்தைப்படுத்துவது என்பது கடினமாக இருக்கும், விற்பனை ஆகுமோ, ஆகாதோ என யோசித்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும், அவர்களுக்கென உரித்த விலையை, விற்பனையை கிடைக்க செய்வது தான் இந்த வாழை இலை ஏலக்கமிஷன் மண்டி.
முதலில் இந்த ஏலக்கமிஷன் மண்டி என்பது நல்ல மார்க்கெட் பகுதியில் வண்டிகள் விடுவதற்கு சுலபமான இடத்தில், பரந்து விரிந்த அமைப்பில் இருக்க வேண்டும், விவசாயிகள் வெட்டிய வாழை இலையை ஐநூறு மற்றும் ஆயிரங்களாக கட்டி மண்டிக்கு வந்து போட்டு விடுவர், அந்த கட்டு போட்ட விவசாயின் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு மாலை நேரங்களில் ஏலம் விடப்படும்.
இலை தேவை இருப்பவர்கள் வந்து ஏலம் கேட்டு கட்டு கட்டுகளாக வாங்கி செல்வர், ஒரு கட்டு ரூ 2000 ரூபாய்க்கு ஏலம் போகிறது என்றால், அதில் 10 சதவிகிதம் மண்டிக்கும், மீதி தொகை கொண்டு வந்து போட்ட விவசாயிக்கும் சேரும், ஒரு நாள் ஒன்றுக்கு 10 கட்டு வந்தால் கூட தினசரி ரூ 2000 வரை வருமானம் ஈட்ட முடியும், திருவிழா, வீட்டு வைபவ சமயங்களில் ஒரு நாள் ஒன்றுக்கு 30 இலை கட்டுகள் கூட ஏலம் ஆகும்.
அந்த சமயங்களில் ஒரு இலையில் விலையே ரூ 5 முதல் ரூ 7 வரை விற்கப்படும், 1000 இலை உள்ள ஒரு கட்டு 5,000 ரூபாய் வரை ஏலத்திற்கு செல்லும், அந்த சமயங்களில் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும், அதே சமயங்களில் ஏலக்கமிஷன் மண்டிக்கும் நல்ல வருமானம் கிட்டும், பெரிதாக எந்த முதலீடும் இல்லாமல், இடம், ஒரு போர்டை மட்டும் வைத்துக் கொண்டு இந்த தொழிலை துவங்க முடியும்.
" நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு 10 கட்டு விற்பனை என்று வைத்தால் கூட சராசரியாக மாதத்திற்கு ரூ 50,000 வரை வருமானம் பார்க்க முடியும், கையில் கிடைப்பது அனைத்தும் இலாபமாக நிற்கும், அது தான் இந்த தொழிலில் ஆகச்சிறந்த அம்சம் "