• India
```

இனி சிலிண்டரின் விலை ரூ 500 தானா? அரசு வெளியிட்ட அறிக்கை!!

cylinder will be given in low price

By Dhiviyaraj

Published on:  2025-01-17 09:46:23  |    145

சிலிண்டர் பயன்பாட்டுக்காக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பை அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

தற்போது இந்தியாவில் சமையல் சிலிண்டரின் பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கிறது என்று கூறலாம். சிலிண்டர் பயன்பாட்டுக்காக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பை அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலால் சிலிண்டரின் பயன்பாடு இன்னும்  அதிகமாகி வருகிறது. 

ஒரு பக்கம் சிலிண்டர் பயன்பாடு அதிகம்  ஆக, மறுபக்கம் சிலிண்டரின் விலை அதிகமாகி வருகிறது. இது சாமானிய மக்களுக்கு சிக்கலாக உள்ளது. சமீபத்தில் சிலிண்டரின் விலை ரூபாய் 1000 தாண்டிய நிலையில் தற்போது சிலிண்டரின் விலை ரூபாய் 900 வரை மாறி இருக்கிறது. சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக உள்ளது.


தற்போது டெல்லியில் சட்டசபை தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொடுத்த உத்தரவாதங்களை நிறைவேற்றும் என்று கூறியுள்ளது. 

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola