Tea Shop Business Profit -வாங்க சார், வாங்க சார் சூடான பஜ்ஜி டீ இந்த குரலை எங்காவது கேட்டது உண்டா, தினம் தினம் எங்காவது ஒரு டீ கடையை கடக்கும் போது இப்படி ஒரு குரலை கேட்டு இருப்போம், நாம் கடந்து போகும் இந்த குரலை ஒரு தொழிலாக ஓட்டி நல்ல இலாபம் ஈட்ட முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அது என்ன ப்ஜ்ஜி டீ?
அது என்ன பஜ்ஜி டீ ஏன்? வடை இருக்க கூடாதா? என நீங்கள் கேட்கும் குரல் இங்கு கேட்கிறது, வடையை விட பஜ்ஜி தான் டீக்கும், காபிக்கும் சரியான காம்பினேசன், அதிலும் கூடவே சட்னி இருந்து விட்டால் அமிர்த்தம் என்ன அமிர்தம் என்றெல்லாம் கேட்கும் அளவிற்கு சுவை இருக்கும். அது போக ஒரு தொழிலாக யோசித்தால் வடையை விட பஜ்ஜியில் தான் அதிக இலாபம் இருக்கும், வேலைப்பளுவும் மிக மிக கம்மி.
வடையை எடுத்துக் கொண்டால், உளுந்து அல்லது கடலை பருப்பு அரைத்து, அதை பிசைந்து, எண்ணெயில் பதமாக போட்டு வடை ஆக்க வேண்டும். பஜ்ஜிக்கு எதையும் அரைக்க தேவை இல்லை, கடலை மாவு, கடலை மாவுக்கு பாதி அளவில் அரிசு மாவு இரண்டையும் கரைத்து, துணை பொருளாக வாழைக்காயோ, அப்பளமோ, முட்டையோ, வெங்காயமோ, குடை மிளகாயோ என எதையும் எடுத்துக் கொண்டு இப்படி ஒரு தடவு அப்படி ஒரு தடவு என தடவி எண்ணெயில் போட்டு எடுத்தால் சூடான பஜ்ஜி ரெடி.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
இன்னொன்று என்னவென்றால் வடையை விட பஜ்ஜியில் இலாபமும் அதிகம் இருக்கும், வடையில் 40 சதவிகிதம் இலாபம் என்றால் பஜ்ஜியில் 65 சதவிகிதம் இலாபம், டீ, பஜ்ஜி காம்பினேசனும் பக்காவாக இருக்கும், டீயை பொறுத்த வரை 1 லிட்டர் பாலுக்கே குறைந்த பட்சம் 100 ரூபாய் இலாபம் மட்டும் தனியாக இருக்கும். நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் பால் ஓட்டினால் அதில் ஒரு ஆயிரம் ரூபாய், ஒரு 100 பஜ்ஜி ஓட்டினால் அதில் ஒரு 350 முதல் 400 ரூபாய் இலாபம் மட்டும் தனியாக ஈட்ட முடியும்.
அந்த வகையில் பார்க்கும் போது வெறும் 10 லிட்டர் பாலுக்கும், 100 பஜ்ஜிக்கும் கணக்கு வைத்தாலே மாதம் 30,000 முதல் 40,000 வரை நிச்சயமாக இலாபம் பார்க்க முடியும்