Mechanic Shop Ideas Tamil - உங்களுக்கு பஞ்சர், செர்வீஸ், ரிப்பேர் உள்ளிட்டவைகள் தெரியும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக மெக்கானிக் ஷாப் துவங்கலாம், எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mechanic Shop Ideas Tamil - மெக்கானிக் ஷாப் வைக்க என்ன என்ன தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு இலாபம் இருக்கும் என்பதெல்லாம் பார்க்கலாம்.
முதலில் மெக்கானிக் ஷாப் வைக்க என்ன என்ன தேவைப்படும்?.
குறைந்தபட்சம் ஒரு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஏர்கம்பிரசர், ஹார்டுவேர் டூல்ஸ் நீங்கள் வாட்டர் சர்வீஸ்சும் வைக்க போகிறீர்கள் என்றால் ஒரு வாசிங் சிஸ்டம் ஒன்றும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், நல்ல விசாலமான கடை ஒன்று தேவைப்படும், நகரின் மையத்தில் இருந்தால் இன்னும் நல்லது, பார்க்கிங் வசதிகள் கொஞ்சம் ஆவது இருக்க வேண்டும். இடத்தையும் கடையின் பெயரையும் நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது.
சரி எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
200 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு ஏர் கம்பிரசர் ஒரு முப்பதாயிரம் வரும், ஹார்டுவேர் டூல்ஸ்கள் ஒரு பத்தாயிரம் வரும், கார், லாரிகள், பைக்குகள் என எல்லாவற்றையும் வாட்டர் சர்வீஸ் செய்யும் வகையில் உங்களுக்கு வாசிங் சிஸ்டம் வேண்டும் எனில் அதன் விலை நாற்பதாயிரம் வரும், வெறும் பைக்கிற்கு மட்டும் போதும் என்றால் நல்ல அட்வான்ஸ்டு வாசிங் சிஸ்டம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வரும்.
டயர்கள், இஞ்சின் ஆயில்கள், அவ்வப்போது மாற்றப்படும் ஆட்டோ மொபைல் ஸ்பேர்கள் உள்ளிட்டவைகளும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் இல்லாத பார்ட்ஸ்களை உடனே பெறும் வகையில் ஏதாவது ஒரு பெரிய ஆட்டோ மொபைல் ஷாப்புடன் டை அப் வைத்துக் கொள்ளலாம், மொத்த முதலீடு என்பது கிட்டதட்ட ஒரு 4 முதல் 5 இலட்சங்கள் வரை ஆகலாம். உங்களிடம் முதலீடு இல்லை எனில் கிட்டதட்ட 95 சதவிகிதம் வரை வங்கி லோன் மூல பெற்றுக் கொள்ளலாம்.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
நாள் ஒன்றுக்கு ஒரு 10 வண்டிகள் வரும் பட்சத்தில் ரிப்பேர், சர்வீஸ்கள் மூலம் மட்டும் குறைந்த பட்சம் தினசரி 1,500 முதல் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். நாளடைவில் சர்வீஸ்களும், ரிப்பேருக்கு வரும் வண்டிகளும் பெருகும் பட்சத்தில் இலாபம் இன்னும் அதிகரிக்கலாம். வெறும் பைக்கிற்கு மட்டும் மெக்கானிக் ஷாப் வைத்துக் கொண்டு மாதம் இரண்டு இலட்சம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
உங்களிடம் ஊழியர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஹோம் சர்வீஸ்சும் மேற்கொள்ளலாம், பலரும் நேரமின்மை காரணமாக தான் அவர்களது வாகனங்களை சர்வர சர்வீஸ் செய்வதில்லை, அவ்வாறாக நீங்கள் ஹோம் சர்வீஸ் செய்யும் போது அவர்களுக்கு அவர்களது வாகனங்களை பராமரிப்பதற்கு அது ஒரு சிறந்த வழியாக அமையும்.
" இலாபத்தை பொறுத்தவரை முதலீடு மட்டும் தான் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய செலவாக தெரியும், அதை நீங்கள் கடனாக பெற்றால் கூட வரும் இலாபத்தின் மூலம் இரண்டு வருடங்களில் அடைத்து விடலாம், மற்றபடி அதற்கு பிறகு நீங்கள் ஊழியர்கள் 3 பேருக்கு ஒரு 50,000 சம்பளம் கொடுத்தாலும் கூட இதர செலவுகள் எல்லாம் போக உங்களுக்கு இலாபமாக 1,20,000 முதல் 1,50,000 வரை இலாபம் கைகளில் நிற்கும் "