• India

மாதம் ரூ 25,000 வரை வருமானம் தரும்..பருத்திப்பால் கடை எப்படி வைப்பது..?

Paruthi Paal Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-31 21:19:51  |    630

Paruthi Paal Business Ideas Tamil - பருத்திப்பால் என்பது கருப்பு பருத்தி விதை, தேங்காய், பச்சரிசி, சுக்கு, ஏலம், கருப்பட்டி அல்லது மண்டவெல்லம் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு பானம் ஆகும், பருத்திப்பாலுக்கு உரிய பருத்தி விதை வாங்கி அரைத்தால் மட்டுமே பால் அதிகம் வரும், சாதாரண விதைகளில் அதிக பருத்திப்பால் வருவதில்லை, ஆதலால் பருத்தி விதைகளை தேர்ந்து எடுப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

ஒரு சிறிய தள்ளு வண்டி, ஒரு சின்ன போர்டு இவ்வளவு இருந்தால் பருத்திப்பால் கடைக்கு போதுமானது, பருத்திப்பாலோடு சேர்த்து பயறு வகைகளும் வைக்கலாம், பாசிபயறு, கொண்டகடலை, அவித்த வேர்கடலை வைத்தால் அதுவும் சேர்ந்து நன்றாக ஓடும், நீங்கள் கருப்பட்டி வைத்து பருத்திப்பால் செய்கிறீர்கள் என்றால் ஒரு கிளாஸ் 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கலாம், மண்டவெல்லம் வைத்து செய்கிறீர்கள் என்றால் 15 ரூபாய் என விலை நிர்ணயிக்கலாம்.



பயறு வகைகள் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கலாம், பருத்திப்பாலோடு பெரும்பாலான கடைகளில் சுக்கு காபியும் வைத்து இருப்பார்கள், அதையும் பட்டியலில் சேர்த்து தொடர விரும்பினால், செய்யலாம், பொதுவாக சாயங்கால நேரங்களிலேயே பருத்திப்பால், சுக்கு காபி என்பது விற்பனை ஆகும், ஒரு நான்கு மணிக்கு கடை திறந்தால் ஒரு 8 மணிக்குள் அத்துனையும் விற்று தீர்ந்து விடும், ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஒரு நான்கு மணி நேரம் தான் கடை.

சரி இலாபம் எப்படி இருக்கும்?

இலாபம் என்னும் போது ஒரு பருத்திப்பாலுக்கு கருப்பட்டி சேர்த்தால் 20 சதவிகிதம் வரை கிடைக்கும், மண்டவெல்லம் சேர்த்தால் 25 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், ஒரு நாளைக்கு ஒரு 70 முதல் 100 எண்ணம் பருத்திப்பால் விற்றால் கூட மாதத்திற்கு ரூ 25,000 முதல் 32,000 வரை வருமானம் கையில் இருக்கும், அதிலும் 4 மணி நேரம் மட்டும் தான் வேலை என்னும் போது ஒரு நல்ல வருமானமாக தான் பார்க்க முடிகிறது.