Stationery Business Ideas in Tamil-நல்ல இலாபம் தரும் வகையில் ஸ்டேசனரி ஸ்டோர் எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்டேசனரி ஸ்டோர் வைக்க அனுமதி வாங்க வேண்டுமா?
பொதுவாகவே தற்போது எல்லா ஸ்டோர் வகைகளுக்கும் குறைந்த பட்சம் நகராட்சிகளில் கடைகளை ரிஜிஸ்டர் செய்து ஆவணம் செய்து கொள்வது அவசியம் ஆகிறது, அந்த வகையில் ஸ்டேசனரி ஸ்டோர் வைக்கிறீர்கள் என்றால் முறையான ஆவணங்கள் மூலம் கடையை நகராட்சி அல்லது பேரூராட்சிகளில் பதிவு செய்து வைத்துக் கொள்வது அவசியம்.
எங்கு வைக்கலாம்? என்ன என்ன பொருள்கள் வைக்கலாம்?
ஸ்டேசனரி ஸ்டோர்கள் என்றாலே பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் இடத்தின் மையத்தில் அல்லது நகரத்தின் மையத்தில் வைப்பது அவசியம், பேனா, பென்சில், சார்ட், பேப்பர், நோட்டுகள், அட்டைகள், நோட்ஸ்சுகள், பிராஜக்டுகளுக்கு தேவையான ஐட்டங்கள், ஸ்டிக்கர்கள், ஸ்டேப்ளர், பசைகள், தெர்மோ கோல் என எதுவும் மாணவர்களிடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு கடை நிரம்பி இருக்க வேண்டும்.
ஒரு சில பேன்சி ஐட்டங்களும் வைப்பது நல்லது, கூடவே ஜெராக்ஸ்சும் வைத்தால் மாணவர்களுக்கு ஏதாவது நோட்ஸ் ஜெராக்ஸ் எடுக்க வேண்டி இருந்தால் அங்கேயே வந்து எடுத்துக் கொள்வார்கள். பேன்சி ஐட்டங்கள் வைக்கும் போது மாணவிகள் ஸ்டேசனரி ஐட்டங்களை வாங்கும் போது அவர்களுக்கு தேவையான பேன்சி ஐட்டங்களையும் வாங்கி விட்டு செல்வார்கள்.
சரி, பொருள்களை எல்லாம் எங்கு கொள்முதல் செய்வது?
உங்களுடைய முதலீடு அதிகம் எனில், இந்தியாமார்ட் போன்ற வலைதளங்களில் ஸ்டேசனரி பொருள்களை மொத்தமாக விற்பதற்காக நிறைய நிறுவனர்கள் இருப்பார்கள், அவர்களுடைய காண்டாக்ட் எண்ணும் இருக்கும். அவர்களை நேரடியாக காண்டாக்ட் செய்தால் அவர்களிடம் இருக்கும் ஐட்டங்களை வாட்சப் மூலம் உங்களுக்கு விலையோடு அனுப்பி வைப்பார்கள்,
உங்களுக்கு ஒகே என்னும் பட்சத்தில் வாட்சப்பிலேயே உங்களுக்கு தேவையான ஆர்டர்களை நீங்கள் கோரலாம், முகவரி அனுப்பி வைக்கும் பட்சத்தில் லாரி செர்வீஸ்கள் மூலம் மொத்தமாக உங்கள் கடைக்கே நேரடியாக வந்து இறங்கி விடும், இவ்வாறாக மொத்த நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் போது இலாபம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
முதலீடு ஓரளவுக்கு, இலாபமும் ஓரளவுக்கு போதும் என்னும் போது உங்கள் ஏரியாவில் உள்ள டீலர்களை, மொத்த விற்பனை மையங்களை அணுகி பொருள்களை கொள்முதல் செய்யலாம், ஸ்டேசனரி ஐட்டங்களை பொறுத்தவரை நீங்கள் நேரடி கொள்முதல் செய்யும் போது 55 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், ஏரியா டீலர்களிடம் கொள்முதல் செய்யும் போது 45-50 சதவிகிதம் வரை இலாப விகிதம் இருக்கும். குறைந்த பட்சம் ஒரு 5 இலட்சம் முதலீடு செய்தால் உங்கள் அதீத உழைப்பு இருக்கும் பட்சத்தில் ஸ்டேசனரி ஸ்டோரில் அதை ஒரு வருடத்திலேயே இலாபகரமாக எடுத்து விடலாம்.
ஸ்டேசனரி கடையை பொறுத்த வரை நல்ல விற்பனை நடக்கும் இடத்தில் நீங்கள் ஒரு சிறிய ஸ்டோர் ஆக வைத்தால் கூட, தினசரி 1200 முதல் 1500 ரூபாய் வரை தனியாக இலாபம் மட்டும் பார்க்க முடியும், பெரிய பிரம்மாண்ட கடையாக வைத்தால் தினசரி 3,000 முதல் 5,000 வரையிலும் கூட இலாபம் பார்க்க முடியும், மாணவர்கள் எப்போதுமே பிரம்மிப்புகளை நோக்கி செல்வார்கள்,அவர்களை ஈர்க்கும் வகையில் கடையை நீட்டாக பெர்பெக்டாக வைப்பது உங்களது கடமை.