• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...மதுரை பேமஸ்...ஜிகர்தண்டா கடை வைப்பது எப்படி?

Jigarthanda Business | Madurai Jigarthanda Franchise Price

ஜிகர்தண்டா வரலாறு

Jigarthanda Business-600 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட முதல் சுல்தான் ஜலாலுதின் ஆசன்கான் அவர்களின் ராஜபானம் தான் ஜிகர்தண்டா என்ற வரலாறு உண்டு, ஆனால் நாயக்க மன்னருக்காக மராட்டிய சமையல்காரர்கள் உருவாக்கிய ராஜபானம் தான் ஜிகர்தண்டா என்ற வரலாறும் உண்டு. ஆனால் அந்த ஜிகர்தண்டாவிற்கும் மதுரையில் தற்போது விற்கப்படும் ஜிகர்தண்டாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.


பாதாம் பிசின் (கடற்பாசி), பாலேடுகள், ஏலம், இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் போன்றவற்றை கொண்டு தான் பழைய கால ஜிகர்தண்டா தயாரிக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் தற்போது ஐஸ்க்ரீம், பாசந்து, நன்னாரி வேர் உள்ளிட்டவைகளும் சேர்க்கப்பட்டு ஜிகர்தண்டா கொஞ்சம் அட்வான்ஸ் ஆகி இருக்கிறது. சரி எப்படி இந்த ஜிகர்தண்டா மதுரை முழுக்க பேமஸ் என்றால் அதற்கு ஷேக் மைதீன் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்து, தள்ளு வண்டிகளில் தெரு தெருவாக விற்றவர் தான் இந்த ஷேக் மைதீன், அதற்கு பின்னர் இவர் தான் ஜிகர்தண்டாவில் ஐஸ்க்ரீம் சேர்த்து ஒரு அப்டேட்டடு ஜிகர்தண்டாவை மதுரை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்,பின்னர் அது மக்களுக்கு பிடித்து போகவே மதுரை விளக்கு தூண் அருகே ஒரு கடையை போட்டு இருக்கிறார்.


அன்று அப்பகுதியில் அந்த ஜிகர்தண்டாவை குடிக்க கூடிய கூட்டம் இன்றும் ஓயவில்லை, தினமும் அந்த ஜிகர்தண்டாவை குடிக்கவே பலரும் விளக்குதூண் இருக்கும் பகுதிக்கு பஸ் ஏறி வருவார்களாம், தற்போது தமிழகம் எங்கும், பேமஸ் ஜிகர்தண்டா என்ற பெயரில் பல கிளைகளை நடத்தி வருகின்றனர். பல கிளைகளையும் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

சரி, இந்த ஜிகர்தண்டா கடையை உங்கள் மாவட்டங்களில் எப்படி நிறுவுவது?

முதலில் நல்ல டவுணில் பரபரப்பான ஏரியாவில் ஒரு கடையை பார்க்க வேண்டும், பின்னர் பேமஸ் ஜிகர்தண்டாவின் முகவர்களை போனில் தொடர்பு கொள்ளலாம், அவர்களது அதிகாரப்பூர்வ பக்கமான https://www.famousjigarthanda.com என்ற வலைதளத்தில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ மொபைல் நம்பர், மெயில் ஐடிகள் எல்லாம் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட டெபாசிட் தொகை இருக்கும், இரண்டு அல்லது மூன்று ப்ரீசர்கள் அவசியம், ப்ரீசர்களை வாங்கி விட்டு, கடையையும் ரெடி பண்ணி விட்டு அவர்களை தொடர்பு கொண்டால் நேரடியாக கடையை வந்து ஒரு முறை பார்ப்பார்கள்.


அவர்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த ஒரிரு நாட்களில் அவர்களே உங்களுக்கு ஜிகர் தண்டாவிற்கு தேவையான முதல் சரக்குகளையும் மூலப்பொருள்களையும் கொடுப்பார்கள், ஜிகர்தண்டாவின் செய்முறையையும் சொல்லி கொடுப்பார்கள், பழகி விட்டால் அடுத்து நீங்களே வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்து பரிமாறலாம், குறைந்த பட்சம் ஒரு ஜிகர்தண்டாவிற்கு 40-50 சதவிகிதம் இலாபம் இருக்கும், அவர்களே ஐஸ்க்ரீம் உள்ளிட்டவைகளின் டீலர் ஷிப்பும் தருகிறார்கள். அதையும் வாங்கி விற்கும் பட்சத்தில் ஒரு ஐஸ்க்ரீமில் 50-55 சதவிகிதம் இலாபம் இருக்கும்.

நல்ல மெயின் ஆன இடத்தில் நீங்கள் வைக்கும் பட்சத்தில் மாதம் 50,000 முதல் ஒரு இலட்சம் வரை இலாபம் மட்டுமே கையில் நிற்கும், இதை விட அதிகமாகவும் உங்களால் சம்பாதிக்க முடியும், அது உங்களது ஆளுமை மற்றும் திறமையை பொறுத்தது

Book Shop Business Ideas Tamil
Entrepreneur