Tuition Centre Business Ideas -தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே போதும், வேறு எந்த முதலீடும் நீங்கள் செய்ய தேவை இல்லை, மதல் 10,000 முதல் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்க இயலும் எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டிகிரி முடித்து இருப்பீர்கள், அரசு வேலைகளுக்கு நீங்கள் படித்துக் கொண்டும் இருக்கலாம், இல்லையேல் வேறு ஏதாவது ஒன்றுக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கலாம், ஆனால் வருமானம் ஏதும் இல்லை என்பவர்களுக்கு தான் இந்த ஐடியா, ஒரு சின்ன பிட் நியூஸ் மட்டும் அடிங்கள், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இங்கு டியூசன் எடுக்கப்பட்டும் என்று, அதை உங்கள் ஊரில் பேப்பர் போடுபவர்களிடம் கொடுத்து, பேப்பரோடு சேர்த்து வீடு முழுக்க போட சொல்லுங்கள்.
பொதுவாக டியூசன் வைப்பதற்கு பெரிதாக முதலீடு தேவை இல்லை, ஒரு போர்டும் ஒரு 10 ரூபாய்க்கு சால்க் பீஸ்சும், உங்களது திறமை என்னும் முதலீடு மட்டுமே போதுமானது, உங்களிடம் படிக்கும் மாணவர்களை நீங்கள் ஜெயிக்க வைக்கும் போது, டியூசன் தொழிலில் அதுவாகவே உங்களை ஜெயிக்க வைக்கும், குறைந்த பட்சம் ஒரு 30 பேர் உங்களது பயிலகத்தில் சேரும் போது மாதம் 10,000 முதல் 15,000 வரை எளிதாக் சம்பாதிக்க முடியும்.