Pottery Shop Business Ideas Tamil - என்ன தான் நாகரீகம், விஞ்ஞானம் எல்லாம் வளர்ச்சி அடைந்தாலும் கூட மக்கள் அவ்வப்போது வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றனர், தற்போதெல்லாம் சாலைகளில் மண்பானை சமையல் ஹோட்டல்களை பார்க்க முடிகிறது, அங்கு பெரும் கூட்டத்தையும் பார்க்கும் போது வியக்கவும் வைக்கிறது, அப்படி என்றால் மக்கள் அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று தானே அர்த்தம்.
தற்போது பெரிய பெரிய வீடுகளில் கூட மண்பாண்டங்களில் செய்த சமையல் பொருள்களை பயன்படுத்தி வருகிறார்கள், காரணம் அதில் சமையல் செய்யும் போது கிடைக்கின்ற சுவை வித்தியாசப்படுகிறது, அது நாவை வெகுவாக ஈர்க்கிறது, ஆதலாம் மக்கள் மீண்டும் மண்பாண்ட சமையலுக்கு மாற முயற்சிக்கின்றனர், அந்த வகையில் ஒரு மண்பாண்ட பொருள்கள் கடையை வெற்றிகரமாக நடத்துவது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலீடு என்ன, கடை எப்படி வைப்பது?
பொதுவாக மண்பாண்டங்கள் காவிரி நதிக்கரையோரம் இருக்கும் கிராமங்கள், தாமிரபரணி நதிக்கரையோரம் இருக்கும் கிராமங்களில் அதிகமாக கிடைக்கின்றன, உங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டுமானால் அரியலூர், மானாமதுரை, திருநெல்வேலி, தேனி, தஞ்சாவூர் என்று உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது களிமண் சமவெளிபரப்பிற்கு சென்று மொத்த விலையில் வாங்கி கொள்ளலாம்.
வண்டி பிடிப்பது முதல் சரக்கை ஏற்றுவது வரை அவர்களே செய்து உங்கள் சரக்கை பத்திரப்படுத்தி ஏற்றுகிறார்கள். பிரம்மாண்டமான கடை வைப்பதர்கு சரக்கிற்கான செலவு என்பது ஒரு 75,000 வரை 1,25,000 வரை ஆகலாம். சாதாரண ஒரு பாத்திரக்கடை எப்படி இருக்குமோ அது போல ரேக்குகள் வைத்து கடையை மண்பாண்டங்களால் நிரப்ப வேண்டும், ரேக்குகள், பர்னிச்சர்ஸ் செலவுகள், லைட் போர்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 50,000 வரை ஆகலாம், மொத்தமாக கையில் ஒரு 2.5 இலட்சம் இருப்பது நல்லது.
சரி என்ன என்ன கடைகளில் இருக்க வேண்டும்?
பூந்தொட்டிகள், சமையலுக்குரிய மட்பாண்டங்கள், மண் அடுப்பு, அழகு சாதன பொருட்கள், மண்பானைகள், மண் விளக்குகள், மீன் சட்டிகள் என ஒரு வீட்டில் பயன்படுத்தும் அத்துனையுமே தற்போதெல்லாம் மண்பாண்ட சந்தைகளில் கிடைக்கின்றன, அத்துனையும் இல்லை என்று சொல்லாத அளவிற்கு கொள்முதல் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
நேரடியாக நீங்கள் மட்பாண்டங்கள் கொள்முதல் செய்வதால் ஒரு மட்பாண்டத்திற்கே 65 முதல் 70 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், நீங்கள் ஈ கமெர்ஸ் மூலமாகவும் மட்பாண்ட பொருள்களை சந்தைப்படுத்தினால் அங்கு 100 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், ஒரு நாளைக்கு 50 முதல் 60 மட்பாண்டங்கள் விற்றால் கூட நாள் ஒன்றுக்கு 8,000 முதல் 10,000 வரை வருமானம் பார்க்க முடியும், மாதத்திற்கு 2.5 இலட்சம் வரை 3 இலட்சம் வரை வருமானம் பார்க்க முடியும்.